ஜித்தன் ரமேஷ் திருமணம் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரியின் மகனான நடிகர் ரமேஷ், மும்பையைச் சேர்ந்த பெண்ணை மணக்கிறார்.தமிழ்த் திரையுலகில் ஏராளமான இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் ஆர்.பி.செளத்ரி. வெற்றிகரமான தயாரிப்பாளராகதிகழ்ந்த ஆர்.பி.செளத்ரி இப்போது அதிக அளவில் படங்களை இயக்குவதில்லை. மாறாக தனது மகன்கள் ஜீவா மற்றம் ரமேஷ் ஆகியோரை சிறந்த நடிகர்களாக உருவாக்க தீவிரமாக உழைத்து வருகிறார். அவரதுமகன் ஜீவா ராம் படம் மூலம் பிரபலமானார். இன்னொரு மகனான ரமேஷ் ஜித்தன் படத்தில் அறிமுகமாகி இப்போது ஜெர்ரி, நீவேணுண்டா செல்லம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ரமேஷுக்கு தற்போது திருமணம் நிச்சயமாகியுள்ளது. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜே.கே.செளத்ரியின் மகள்ஷில்பாவுக்கும், ரமேஷுக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டள்ளது. இவர்களது திருமணம் வருகிற 7ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை சாந்தோம் மேயர்ராமநாதன் மண்டபத்தில் வருகிற 12ம் தேதி மாலை ஆறரை மணிக்கு நடைபெறுகிறது. திருமண ஏற்பாடுகளை செளத்ரி,மகன்கள் சுரேஷ், ஜீவன், நடிகர் ஜீவா ஆகியோர் பார்த்து வருகிறார்கள்.
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரியின் மகனான நடிகர் ரமேஷ், மும்பையைச் சேர்ந்த பெண்ணை மணக்கிறார்.
தமிழ்த் திரையுலகில் ஏராளமான இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் ஆர்.பி.செளத்ரி. வெற்றிகரமான தயாரிப்பாளராகதிகழ்ந்த ஆர்.பி.செளத்ரி இப்போது அதிக அளவில் படங்களை இயக்குவதில்லை.
மாறாக தனது மகன்கள் ஜீவா மற்றம் ரமேஷ் ஆகியோரை சிறந்த நடிகர்களாக உருவாக்க தீவிரமாக உழைத்து வருகிறார். அவரதுமகன் ஜீவா ராம் படம் மூலம் பிரபலமானார். இன்னொரு மகனான ரமேஷ் ஜித்தன் படத்தில் அறிமுகமாகி இப்போது ஜெர்ரி, நீவேணுண்டா செல்லம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
ரமேஷுக்கு தற்போது திருமணம் நிச்சயமாகியுள்ளது. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜே.கே.செளத்ரியின் மகள்ஷில்பாவுக்கும், ரமேஷுக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டள்ளது.
இவர்களது திருமணம் வருகிற 7ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை சாந்தோம் மேயர்ராமநாதன் மண்டபத்தில் வருகிற 12ம் தேதி மாலை ஆறரை மணிக்கு நடைபெறுகிறது. திருமண ஏற்பாடுகளை செளத்ரி,மகன்கள் சுரேஷ், ஜீவன், நடிகர் ஜீவா ஆகியோர் பார்த்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications