அதுக்கெல்லாம் என் தம்பி சியான் விக்ரம் இருக்காரு.. ராம்கி சொன்ன சூப்பர் மேட்டர்.. இது நல்லா இருக்கே!

சென்னை: இந்த ஆண்டு ராம்கி மற்றும் நிரோஷா இருவரும் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படத்தில் நிரோஷா முதல் முறையாக சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடித்தார். ஆனால், அவருக்கு அந்த படம் பெரிதாக கைகொடுக்கவில்லை.

ஆனால், டைட்டிலிலேயே லக்கி இருந்த லக்கி பாஸ்கர் திரைப்படம் நடிகர் ராம்கிக்கு இந்த ஆண்டு சூப்பரான கம்பேக் படமாக மாறியது. துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தில் ராம்கி நடித்த நடிப்பை பார்த்து ரசிகர்கள் இப்படியொருவர் நம்ம வாழ்க்கையிலும் வந்து நம்மை உச்சத்துக்கு கொண்டு செல்லமாட்டாரா என நினைக்கும் அளவுக்கு அவருடைய கதாபாத்திரம் அமைந்துள்ளது.

ramki chiyaan vikram lucky baskhar

அதற்கு முன்னதாக சூப்பர் ஹிட் அடித்த விஜய் சேதுபதியின் மகாராஜா படத்திலும் ராம்கியின் இன்ஸ்பிரேஷன் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் சியான் விக்ரம் பற்றி பேசியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ரஜினியை ஓவர்டேக் செய்த ராம்கி: ரஜினிகாந்த் ஹேர்ஸ்டைல் ஒரு காலத்தில் டிரெண்டான நிலையில், அதை ஓவர்டேக் செய்துவிட்டு ராம்கியின் ஹேர்ஸ்டைல் மிகவும் பிரபலமானது. பலரும் அதே போல ஹேர்ஸ்டைல் வைக்க வேண்டும் என்று சலூன் கடைக்காரர்களை தொல்லை பண்ண ஆரம்பித்தனர். இன்றைக்கும் அதே ஹேர்ஸ்டைல் உடன் ராம்கி லக்கி பாஸ்கர் படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். 62 வயதிலும் அப்போது பார்த்தது போலவே இருக்கீங்களே என ராம்கியை பார்த்து பலரும் பொறாமைப்பட்டு வருகின்றனர்.

ரொம்பவே இயல்பாக இருப்பேன்: சினிமாவை நான் எப்போதுமே ஜாலியாகத்தான் எடுத்திருக்கிறேன். என்னுடைய ஹேர் ஸ்டைலை கூட மாற்றாமல் நாம் நடித்தால் போதும் என நினைத்து தான் நடித்து வருகிறேன். சிலர் என்னிடம் வந்து உங்க லுக்கை இப்படி டோட்டலா சேஞ்ச் பண்ணலாம் என்றெல்லாம் சொன்னால் கூட நான் அதிகமாக ஆர்வம் செலுத்தியது இல்லை என்று கூறியுள்ளார்.

அதுக்கெல்லாம் என் தம்பி சியான் இருக்கான்: அந்த பேட்டியில் ராம்கி கெட்டப் சேஞ்ச் பற்றி பேசும் போது, அதுக்கெல்லாம் என் தம்பி சியான் விக்ரம் இருக்கான். அவர் ஒரு படத்துக்காக எந்தளவுக்கு மெனக்கெட்டு உடலை வருத்திக் கொண்டும் அப்படியே அந்த கதாபாத்திரமாகவும் மாறி நடிக்கிறார். அதெல்லாம் பார்த்தால் எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கும். ஆனால், என்னால் அதையெல்லாம் செய்ய முடியாது. அதற்கு சினிமா மீது ஒரு வெறியுடன் இருக்கும் நிலை இருந்தால் மட்டுமே முடியும் என சியான் விக்ரம் படத்துக்கு படம் கெட்டப் மாற்றி நடிப்பதை பாராட்டி பேசியுள்ளார் லக்கி பாஸ்கர் ராம்கி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X