ஒப்பந்தமான படத்தில் இருந்து திடீர் விலகல்... நடிகர் ராணாவுக்கு நிஜமாகவே என்னதான் ஆச்சு?
மும்பை: ஒப்பந்தமான படத்தில் இருந்து நடிகர் ராணா திடீரென விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பிரபல தெலுங்கு நடிகர் ராணா. இவர் தமிழில், அஜித்தின் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.
இந்தி படங்களில் நடித்துவரும் ராணா, சமீபத்தில் கவுதம் வாசுதேவ் மேனனின், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம்
கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது உடல்நிலை குறித்து பரபரப்பு தகவல்கள் வெளிவந்தன. இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் மிகவும் ஒல்லியாக நோயாளி போல காட்சியளித்தார். இது அவரது ரசிகர்களை கவலையடைய செய்திருந்தது. அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வந்தனர்.

அமெரிக்காவில்
அவருக்கு கிட்னி பிரச்னை என்றும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இதுபற்றி அவரோ, அவரது குடும்பத்தினரோ எதுவும் தெரிவிக்க வில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் அவர் படங்களில் மீண்டும் நடிக்க ரெடியாகி விட்டதாகக் கூறப்பட்டது.

சென்னை ரெஜிமென்ட்
விரதபர்வம் 1992 என்ற தெலுங்கு படத்தில் அவர் நடித்து வருகிறார். இதற்கிடையே, அவர் அஜய்தேவ்கன் ஹீரோவாக நடிக்கும் புஜ்: த பிரைட் ஆப் இந்தியா (Bhuj: The Pride of India) என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அவர் சென்னை ரெஜிமென்ட் அதிகாரியாக நடிக்க இருந்தார்.

விலகியுள்ளார்
இந்தப் படத்தில், சஞ்சய் தத், சோனாக்ஷி சின்ஹா, பிரனிதா உட்பட பலர் நடிக்கின்றனர். அபிஷேக் துதையா இயக்கும் இந்தப் படத்தில் இருந்து, நடிகர் ராணா இப்போது விலகியுள்ளார். இந்த படத்தில் பரினீதி சோப்ரா ஹீரோயினாக நடிக்க இருந்தார். அவர் திடீரென விலகினார். இப்போது ராணாவும் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடல் நிலை
படத்தில் ரிஸ்கான ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பதாலும், ராணாவுக்கு உடல் நிலை சரியில்லை, அந்தக் காட்சிகளில் நடிக்க முடியாது என்பதாலும் அவர் விலகியுள்ள தாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











