twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராணாவுக்கு சிறுநீரக கோளாறா, சிங்கப்பூரில் சிகிச்சையா?: உண்மை என்ன?

    By Siva
    |

    ஹைதராபாத்:

    பாகுபலி புகழ் ராணாவுக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பதாக வெளியான தகவல் குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.

    நடிகர் ராணா சிறுநீரக பிரச்சனையால் அவதிப்படுவதாகவும் அவர் ரஜினிகாந்த் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

    ராணாவுக்கு சிறுநீரக பிரச்சனையா என்று திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    சார்

    சார்

    ராணாவின் தம்பி அபிராம் பட வாய்ப்பு கொடுப்பதாக வாக்களித்து தன்னை படுக்கையில் பயன்படுத்திக் கொண்டதாக ஸ்ரீ ரெட்டி குற்றம்சாட்டியதுடன் புகைப்படங்களையும் வெளியிட்டார். இந்நிலையில் அவர் ராணாவின் நிலை குறித்து அறிந்து சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, ராணா சாரின் உடல்நலப் பிரச்சனை குறித்து அறிந்து கவலையாக உள்ளது. அது சிறிய பிரச்சனையாக இருக்கும் என்று நம்புகிறேன். சீக்கிரம் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    அபிராம்

    அபிராம்

    முன்னதாக ராணாவை பாவா என்ற ஸ்ரீ ரெட்டி தற்போது சார் என்று குறிப்பிட்டிருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது. தம்பி மீது பாலியல் புகார் தெரிவித்துவிட்டு அண்ணனுக்காக கவலைப்படுகிறாரா ஸ்ரீ ரெட்டி என்றே அனைவரும் வியக்கிறார்கள்.

    ராணா

    ராணா

    எனக்கு சிறுநீரக பிரச்சனை எல்லாம் கிடையாது. அது வெறும் வதந்தி. ரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளதால் கண் அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் உள்ளது. மற்றபடி நான் நலமாக உள்ளேன் என்று ராணா விளக்கம் அளித்துள்ளார்.

    பிசி

    பிசி

    ராணா தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் பிசியாக உள்ளார். ராணா முதன் முதலாக மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தில் அவர் திருவிதாங்கூர் மன்னராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Rana Daggubati has rubbished the rumours about his kidney ailments. He said that he has BP issues and that's why his eye surgery is getting delayed.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X