தன்னை போன்றே ஒரு கண் தெரியாத ஏழை தாய்க்காக கூலி வேலை பார்த்த ராணா
ஹைதராபாத்: ஒரு கண்ணில் பார்வையில்லாத ஏழை தாய்க்கு உதவ நடிகர் ராணா காய்கறி சந்தையில் கூலியாக வேலை செய்துள்ளார்.
தெலுங்கு நடிகர் ராணா எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்கள் மூலம் அவர் மிகவும் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் கலந்து கொண்ட டிவி நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் ராணா தனது வலது கண்ணில் பார்வை இல்லை என்று கூறியுள்ளார்.

நிகழ்ச்சி
நடிகை லட்சுமி மஞ்சு தான் நடத்திய டிவி நிகழ்ச்சியில் ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு பிரபலத்தை வரவழைத்து யாராவது ஒரு குடும்பத்திற்கு நிதியுதவி செய்ய வைத்தார்.

நிதியுதவி
லட்சுமி மஞ்சு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் டீக்கடையில் வேலை செய்வது உள்ளிட்ட ஏதாவது வேலை செய்து சம்பாதித்து உதவினார்கள். மேலும் அவர்கள் கையில் இருந்தும் பணம் கொடுத்தார்கள்.

ராணா
ராணா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வலது கண் தெரியாத ஒரு ஏழை தாய் பங்கேற்றார். அவருக்கு உதவ ராணா காய்கறி சந்தையில் கூலி வேலை பார்த்தார்.

கடவுள்
அந்த ஏழைத் தாயின் மகன்களிடம் தான் ராணா தனக்கு வலது கண்ணில் பார்வை இல்லை என்றார். மேலும் நன்றாக படித்து, தாயை மகிழ்விக்க வேண்டும் என்று அவர் அந்த சிறுவன்களிடம் கூறினார்.


Click it and Unblock the Notifications











