விளம்பரத்துல நடிக்க இந்த நடிகருக்கு ஒரு நாள் சம்பளம் எவ்ளோ தெரியுமா? கேட்டீங்க மயக்கம் வந்துடும்!
விளம்பர படங்களில் நடிக்க நடிகர் ரன்பீர் கபூர் ஒரு நாளைக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
Recommended Video

மும்பை: விளம்பர படங்களில் நடிக்க நடிகர் ரன்பீர் கபூர் ஒரு நாளைக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
நடிகர் ரன்பீர் கபூர் பெயிண்ட், குளிர்பானங்கள், டி.வி, இருசக்கர வாகனங்கள் போன்றவற்றின் விளம்பரங்களில் நடித்து வருகிறார். இந்த விளம்பரங்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.3 கோடியில் இருந்து 3.5 கோடிவரை சம்பளம் வாங்குகிறார்.
இந்நிலையில் ரன்பீர் கபூர் நடிக்கும் படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சமீபத்தில் சஞ்சய்தத் வாழ்க்கையை மையமாக வைத்து 'சஞ்சு' என்ற பெயரில் வெளியான படத்தில் சஞ்சய்தத் வேடத்தில் நடித்து இருந்தார்.

வரவேற்பு
இந்த படத்துக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. உலகம் முழுவதும் திரையிடப்பட்டு ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனையும் நிகழ்த்தியது.

எகிறியுள்ளது
இந்த படத்துக்கு பிறகு ரன்பீர் கபூர் மார்க்கெட் மேலும் உயர்ந்து இருக்கிறது. இதனால் விளம்பர படங்களுக்கு வாங்கும் சம்பளமும் எகிறியுள்ளது.

ரூ.6 கோடி
விளம்பர படங்களுக்கான சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தி இருக்கிறார். சஞ்சு பட வெற்றிக்கு பிறகு விளம்பர படங்களில் நடிக்க ஒரு நாள் சம்பளமாக ரூ.6 கோடி நிர்ணயித்து உள்ளார்.

விளம்பர படங்கள்
அந்த தொகையை கொடுத்து அவரை விளம்பர படங்களில் நடிக்க வைக்க விளம்பர நிறுவனங்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ரன்பீர் கபூருக்கு இந்தியில் இப்போது 3 படங்கள் கைவசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











