ஐஸ்வர்யா ராயுடன் ரொமான்ஸ்னா யார்தான் நோ சொல்வாங்க.. அச்சச்சோ என்ன ரன்பீர் கபூர் இப்படி பேசிருக்காரு
மும்பை: இந்தியாவிலிருந்து உலக அழகி பட்டம் வென்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் அந்தப் பட்டத்தை பெற்றவர்களாக இருந்தாலும் ஐஸ்வர்யா ராய் எப்போதும் ஸ்பெஷல்தான். உலக அழகி என்றாலே ஐஸ்வர்யா ராய்தான் இந்தியர்கள் மனதில் சட்டென்று தோன்றுவார். அந்த அளவுக்கு அவர் மக்கள் மனதில் நிரம்பி இருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தனது கணவர் அபிஷேக் பச்சனை பிரியவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அது வெறும் வதந்தி என்று பின்னர் உறுதியானது.
உலக அழகி என்ற பட்டத்தின் மீது பல பெண்களுக்கு ஆசை உண்டு. அந்த ஆசையை இந்தியாவிலிருந்து சென்று நிறைவேற்றியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஐஸ்வர்யா ராய்தான் முதன்மை இடத்தில் இருக்கிறார். உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஐஸ்வர்யா. அந்தப் படம் க்ளாசிக் படமாக இன்றுவரை கொண்டாடப்படுகிறது. ஐஸ்வர்யா ராயின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.

ஹிந்தியில் பிஸி: தமிழில் அவர் அறிமுகமானாலும் தொடர்ந்து கோலிவுட்டில் நடிக்காமல் ஹிந்தி பக்கம் சென்றார். அங்கும் அவருக்கு பலமான வரவேற்பு கிடைத்தது. அங்கு முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டு நடித்துவந்த ஐஸ்; அவ்வப்போது தமிழிலும் நடிக்க மறக்கவில்லை. அப்படி அவர் நடித்த ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. கடைசியாக அவர் தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். தான் ஏற்றிருந்த நந்தினி கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்திருந்தார்.
திருமணம்: இதற்கிடையே பிக் பி என்று அழைக்கப்படும் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா ராய். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யார் ராய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும்; அதனால் அவர்கள் விவாகரத்து பெறவிருக்கிறார்கள் என்றும் வதந்திகள் தொடர்ந்து பரவிவந்தன.
வதந்திக்கு முற்றுப்புள்ளி: ஆனால் அப்படி வதந்திகள் பரவியதை அடுத்து சில நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டு முற்றுப்புள்ளி வைத்தனர். சூழல் இப்படி இருக்க அண்மையில் நடந்து முடிந்த ஆனந்த் அம்பானியின் திருமணத்திலும் குடும்பத்தோடு கலந்துகொண்டார் ஐஸ்வர்யா ராய். அதேசமயம் அந்த திருமணத்தில் ஒரு புகைப்படம் பரவியது. அதாவது ஐஸ்வர்யா ராய் தனது முன்னாள் காதலர் சல்மான் கானோடு இருக்கும்படியான புகைப்படம்தான் அது. ஆனால் அது போலியானது என்பது உறுதியானது.
ரன்பீர் கபூர் பேட்டி: இந்நிலையில் ரன்பீர் கபூர் ஐஸ்வர்யா ராய் குறித்து அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில், "ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகன் நான். எனது தந்தை இயக்கிய படத்தில் அவர் நடித்தபோதே எனக்கு அவர் பழக்கம். அப்போது அவரோடு நிறைய நேரம் ஸ்பெண்ட் செய்திருக்கிறேன். Ae Dil Hai Mushkil படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் நடிக்கிறோம் என்று தெரிந்ததும் சந்தோஷம்தான் ஏற்பட்டது. அவருடன் ரொமான்ஸ் செய்ய சொன்னால் எந்த நடிகர்தான் வேண்டாம் என்று சொல்வார். ஆனால் ஹீரோ ரன்பீர் கபூரா என்று கேட்டுவிட்டு அவர் ஒத்துக்கொள்ளமாட்டாரோ என்று நினைத்தேன். நல்ல வேளை அதுமாதிரி நடக்கவில்லை" என்றார்.
முன்னதாக திருமணத்துக்கு பிறகும் Ae Dil Hai Mushkil படத்தில் ஐஸ்வர்யா ராய் சில நெருக்கமான காட்சிகளில் நடித்ததால் அவரது வீட்டுக்குள் பூகம்பம் வந்ததாக பேச்சுக்கள் எழுந்தன. அந்த பேச்சுக்கள் சில மாதங்கள் முன்புவரைகூட தொடர்ந்துகொண்டிருந்தது. ஆனால் தானும், ஐஸ்வர்யா ராயும் விவாகரத்து எல்லாம் செய்துகொள்ளமாட்டோம் என்று அபிஷேக் பச்சன் விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











