»   »  'தலைவரை இயக்க சரியான ஆள்தான் ரஞ்சித்!' - கார்த்தி

'தலைவரை இயக்க சரியான ஆள்தான் ரஞ்சித்!' - கார்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தலைவரை வித்தியாசமாக இயக்க சரியான இயக்குநர் ரஞ்சித்-தான் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

ரஞ்சித் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் விரைவில் தொடங்கவிருக்கிறது. கடந்த மாதம் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து நடிகர்கள், இயக்குநர்கள் பலரும் அதுகுறித்த கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

பிரபலங்கள்

பிரபலங்கள்

ரஞ்சித்தின் குருவான வெங்கட் பிரபு இந்த அறிவிப்பைக் கொண்டாடினார். அவர் தம்பி பிரேம்ஜி தீவிர ரஜினி ரசிகர். எனவே தலைவர் - ரஞ்சித் படம் புதிய சரித்திரம் படைக்கும் என்றார். சூர்யா, ஆர்யா, விஷால், சிம்பு, ஹன்சிகா, காஜல் அகர்வால் என பல முன்னணி நடிகர் நடிகைகளும் இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவித்தனர்.

கார்த்தி

கார்த்தி

இந்த நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ் படத்தில் நடித்து பெரிய வெற்றி பெற்ற கார்த்தியும் இந்தப் படம் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அவரும் தீவிர ரஜினி ரசிகர்.

சரியான ஆள்

சரியான ஆள்

அவர் கூறுகையில், "ரஞ்சித் எனக்குப் போன் செய்து சூப்பர் ஸ்டாரை இயக்கப் போகிறேன் என்று சொன்னதுமே ரொம்பவும் மகிழ்ந்தேன். ஒரு தீவிர ரஜினி ரசிகனாக, தலைவரை வித்தியாசமான வேடத்தில் பார்க்க ஆசைப்பட்டேன். அவரை இயக்க சரியான ஆள்தான் ரஞ்சித்," என்றார்.

ரஜினி பாராட்டு

ரஜினி பாராட்டு

கார்த்தி தான் நடித்த பெரும்பாலான படங்களை முதலில் ரஜினிக்குதான் போட்டுக் காட்டுவது வழக்கம். பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், பையா, பிரியாணி போன்ற படங்களைப் பார்த்து கார்த்தியைப் பாராட்டியுள்ளார் ரஜினி.

English summary
Actor Karthi says that Ranjith is the right person to direct 'Thalaivar' Rajini.
Please Wait while comments are loading...