செக்ஸ் இல்லாமல் என்னால் இருக்க முடியாது: நடிகர் ரன்வீர் சிங்
மும்பை: செக்ஸ் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்று பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து அவர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் ராம் லீலா படத்தில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த தீபிகா படுகோனே மீது காதல் வயப்பட்டார்.
அவர்கள் இருவரும் படப்பிடிப்பிலும், வெளி இடங்களிலும் நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்டது.

டெங்கு
ரன்வீர் சிங்கிற்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை டிஸ்சார்ஜ் செய்தபோது தீபிகா தான் மருத்துவமனைக்கு வந்து ரன்வீரை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

காதல்
ரன்வீர் சிங் தீபிகாவை காதலிப்பதை ஒப்புக் கொள்ளாவிட்டாலும், மறுக்கவும் இல்லை. ஆனால் தீபிகாவோ ராம் லீலா படப்பிடிப்பு முடிந்த பிறகு கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தான் யாரையும் காதலிக்கவில்லை என்றார்.

இளைஞர்கள் நிகழ்ச்சி
ரன்வீர் சிங் இளைஞர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில் அவர் மிகவும் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். நீங்கள் ஏதாவது அறிவுப்பூர்வமாக பேச வேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

செக்ஸ்
ஜாலியாக மனதில் பட்டதை பேசிய ரன்வீர் அங்கு கூடியிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். காரணம் செக்ஸ் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது என்று அவர் கூறியது தான்.

விளம்பரமா?
நடிகர் ரன்வீர் சிங் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் செக்ஸ் பற்றி பேசியிருப்பது விளம்பரத்திற்காக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











