ராஷ்மிகா மந்தனா திருமணம்.. காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டிக்கு என்ன கோபம்?.. இப்படி அசிங்கப்படுத்திட்டாரே

சென்னை: ராஷ்மிகா மந்தனாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் மலர்ந்த காதலுக்கு இரண்டு பேரின் வீட்டிலும் சம்மதம் கிடைத்தது. அதனையடுத்து கடந்த வருடம் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட அவர்கள்; இன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வைத்து திருமணத்தையும் முடித்திருக்கிறார்கள். சினிமாவில் பக்கா கெமிஸ்ட்ரியோடு வலம் வந்த அவர்கள்; ரியல் வாழ்க்கையிலும் சேர்ந்திருப்பதற்கு இரண்டு பேரின் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார்கள்.

ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் திரைப்படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள். ஏற்கனகனவே கன்னட படமான க்ரிக் பார்ட்டியில் நடித்தபோது அந்தப் படத்தின் ஹீரோ ரக்‌ஷித் ஷெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்றார் ராஷ்மிகா. ஆனால் சில காரணங்களால் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. அதற்கு பிறகு ஒரு டாக்ஸிக் உறவிலிருந்து என்னை காப்பாற்றியவர் விஜய் தேவரகொண்டாதான் என பேட்டியில் நேஷனல் க்ரஷ் கூறியிருந்தார். எனவே ராஷ்மிகா மீது எடுத்துக்கொண்ட அக்கறைதான் விஜய் மீது காதல் வர காரணம் என கருதப்படுகிறது.

Rashmika Mandanna Wedding Grand Udaipur Ceremony Ends Rishab Shetty Reaction Trends Online
Photo Credit:

வீட்டு சம்மதம்: விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் நீண்ட வருடங்களாகவே காதலித்துவந்தார்கள். அவர்களது காதலுக்கு உடனடியாக வீட்டு சம்மதம் கிடைத்தது. தொடர்ந்து கடந்த வருடம் நிச்சயதார்த்தமும் நடந்தது. திருமணத்தின் முதல் அடியை எடுத்து வைத்ததுவிட்டதால்; இரண்டு பேரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. அதற்கு பதில் சொல்லும் விதமாக 26ஆம் தேதி தங்கள் திருமணம் நடக்கும் என அவர்கள் சோஷியல் மீடியா மூலம் உறுதி செய்து திருமணத்துக்கு VIROSH திருமணம் என்றும் பெயர் வைத்தார்கள்.

Also Read
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்தது.. குவியும் வாழ்த்து.. வாழ்க்கையில் இணைந்த ஜோடி
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்தது.. குவியும் வாழ்த்து.. வாழ்க்கையில் இணைந்த ஜோடி

உதய்பூரில் கோலாகலம்: திருமண ஏற்பாடுகள் எல்லாம் சூப்பராக நடந்தன. மொத்தம் மூன்று நான்கு நாட்களுக்கு அவர்களின் கொண்டாட்டம் பிளான் செய்யப்பட்டிருந்தது. அதன்படி திருமணத்தில் கலந்துகொள்ளும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு 22ஆம் தேதியே கேண்டில் லைட் டின்னர், நீச்சல் குள பார்ட்டி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 23ல் ஹல்தி மற்றும் மெஹந்தியும், 24ல் சங்கீத் நிகழ்ச்சியும் நடந்தன. இந்த நிகழ்வின் போது அந்த ஐடிசி மெமண்டோஸ் மாளிகையே மிளிர்ந்தது. இரண்டு பேரின் தாயும் அட்டகாசமாக நடனம் எல்லாம ஆடினார்கள். மேலும் குடும்பத்தினரிடையே கிரிக்கெட் போட்டியும் நடைபெற்றது.

திருமணம் முடிந்தது: இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்ததை அடுத்து இன்று காலை 10.15 மணி அளவில் திருமணமும் நடந்து முடிந்திருக்கிறது. அவர்களுக்கு குடும்பத்தினர் தங்களது முழு ஆசீர்வாதத்தையும் வழங்கினார்கள். பிரதமர் மோடி முதல் பலரும் வாழ்த்துகளும் தெரிவித்தார்கள். இன்று மாலை நான்கு மணிக்கு கொடவா சடங்குகளின்படி மீண்டும் அவர்கள் திருமணம் செய்துகொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் நான்காம் தேதி ஹைதராபாத்தில் ரிசப்ஷனை முடித்துக்கொண்டு; ஒரு மாதம் அனைத்திலிருந்தும் விடுப்பு எடுக்கவிருக்கிறார்கள்.

அசிங்கப்படுத்திய ரிஷப் ஷெட்டி: இந்நிலையில் காந்தாரா ஹீரோவான ரிஷப் ஷெட்டியிடம் செய்தியாளர்கள் ராஷ்மிகா மந்தனா திருமணத்துக்கு பத்திரிகை வந்ததா என கேள்வியை ஆரம்பித்தார்கள். அவரோ அந்த கேள்வியை முடிப்பதற்குள்ளாகவே 'நன்றி' என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதைப் பார்த்த ரசிகர்களோ இந்தத் திருமணத்தில் ரிஷப்புக்கு என்ன கோபம் பொசுக்குனு இப்படி அசிங்கப்படுத்திட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.முன்னதாக க்ரிக் பார்ட்டியை ரிஷப் ஷெட்டிதான் இயக்கியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X