6 மாசத்துல சிக்ஸ் பேக் எப்படி சாத்தியமாச்சு.. மதுவை எப்படி விட்டேன்.. வீடியோ போட்ட விஷ்ணு விஷால்!

Recommended Video

Vishnu Vishal jwala gutta got hitched up | New Year 2020

சென்னை: கடந்த இரண்டரை ஆண்டுகளாக தீராத மன அழுத்தத்தில் மதுவுக்கு அடிமையாகி இருந்ததையும், ஆறு மாத காலத்தில் சிக்ஸ் பேக் வைத்தது குறித்தும் வீடியோ வெளியிட்டு நடிகர் விஷ்ணு விஷால் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் இதுகுறித்த விஷ்ணு விஷாலின் ஓப்பன் கடிதம் சமூக வலைதளத்தில் வைரலானது.

விஷ்ணு விஷாலின் சிக்ஸ் பேக் புகைப்படமும் பல இளைஞர்களுக்கு உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இந்நிலையில், இப்படியொரு மோட்டிவேஷன் வீடியோவை விஷ்ணு விஷால் தற்போது வெளியிட்டுள்ளார்.

விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால்

2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணு விஷால், தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என பல ஹிட் படங்களை விஷ்ணு விஷால் கொடுத்துள்ளார்.

பிளாக்பஸ்டர்

பிளாக்பஸ்டர்

எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த 2018ம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம் இந்தியளவில் விஷ்ணு விஷாலின் நடிப்புத் திறமையை கொண்டு சேர்த்தது. சைக்கோ த்ரில்லர் படமாக உருவான ராட்சசன் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

சோதனை காலம்

சோதனை காலம்

ஆனால், ராட்சசன் படத்திற்கு பிறகு புதிய உச்சங்களை விஷ்ணு விஷால் தொடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவருக்கு சோதனை காலம் தான் தொடங்கியது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான விஷ்ணு விஷால், தனது மனைவியை விவாகரத்து செய்தார். செல்ல மகனை பிரிந்தார். மேலும், மனதில் நிம்மதியின்றி கடந்த இரண்டரை காலம் திரிந்ததாக விஷ்ணு விஷால் சமீபத்தில் எழுதிய உருக்கமான கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

கம்பேக்

கம்பேக்

இப்படியே போனால், நிலைமை மோசமாகி விடும் என நினைத்த விஷ்ணு விஷால் மீண்டும் கம்பேக் ஆக முடிவு செய்தார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் எனும் தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, எஃப்.ஐ.ஆர் படத்தில் நடித்து வருகிறார்.

சிக்ஸ்பேக்

எஃப்.ஐ.ஆர் படத்துக்காக சிக்ஸ்பேக் வைக்கும் முயற்சியில் இறங்கிய விஷ்ணு விஷால், ஜிம்மே கதியென கிடந்துள்ளார். சுமார் 6 மாத காலம் தீவிரமாக பயிற்சி செய்து வாரணம் ஆயிரம் சூர்யாவை போல சிக்ஸ் பேக் வைத்து அசத்தியுள்ளார்.

டிரான்ஸ்ஃபர்மேஷன்

சுமார் 6 மாத காலத்தில் தான் எப்படி மது பழக்கத்தில் அடிமையாகி இருந்ததில் இருந்து மீண்டேன் என்றும், தனது தொப்பை போட்ட வயிற்றை எப்படி சிக்ஸ் பேக் வயிறாக மாற்றினேன் என்றும் டிரான்ஸ்ஃபர்மேஷன் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு விஷ்ணு விஷால் விளக்கமளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X