தமன்னா-ரவிகிருஷ்ணா-அக்ஷரா

By Staff


தத்தித் தத்தி வசனம் பேசும் ரவி கிருஷ்ணா பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார்.

Click here for more images

ஒரு காலத்தில் பிரமாண்டப் படங்களைக் கொடுத்தவர் ஏ.எம்.ரத்னம். இப்போது நொடித்துப் போய்க் கிடக்கிறார். இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள பீமா எப்போது திரைக்கு வரும் என்று யாருக்குமே தெரியவில்லை.

இவரது மகன்தான் ரவிகிருஷ்ணா. இளம் ஹீரோக்களின் படையெடுப்பின்போது ரவிகிருஷ்ணாவும் ஹீரோ ஆனார். 7ஜி ரெயின்போ காலனியில் நாயகனாக நடித்தார். கேடி என்ற படத்திலும் நடித்துப் பார்த்தார்.

ஆனால் அவர் தத்தித் தத்தி வசனம் பேசியதும், கஷ்டப்பட்டு நடிப்பைக் கொட்ட முயற்சித்ததும் ரசிகர்களைக் கவரவில்லை. அவரைக் கேலி செய்து சத்யராஜ் வசனம் பேசி நடிக்கும் அளவுக்கு ரவிகிருஷ்ணாவின் நடிப்பு அபாரமாக இருந்தது.

இப்படி பல குளறுபடிகள் இருந்ததால் ரவிகிருஷ்ணாவால் வெற்றிகரமான நடிகராக வர முடியவில்லை. இதன் காரணமாக இடையில் ஒரு படமும் இல்லாமல் போனது.

இந்த நிலையில் மீண்டும் வருகிறார் ரவிகிருஷ்ணா. படத்திற்கு அந்தக் காலத்து எம்.ஜி.ஆர். படமான நேற்று இன்று நாளை என்ற பெயரை சூட்டியுள்ளனர்.

படத்தில் ரவிகிருஷ்ணாவுக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் கேடியில் ஏற்கனவே ஜோடி சேர்ந்த தமன்னா. இன்னொருவர் அக்ஷரா. லஷ்மி காந்த் படத்தை இயக்கவுள்ளார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்தை உருவாக்குகின்றனர்.

தமன்னாவும் கிட்டத்தட்ட ரவிகிருஷ்ணா நிலையில்தான் உள்ளார். கேடியில் வில்லத்தனம் கலந்த 2வது நாயகி வேடத்தில் நடித்திருந்தார் தமன்னா. இதையடுத்து எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடித்தார். எந்தப் படமும் இவருக்குக் கை கொடுக்கவில்லை. மாறாக விளம்பரப் படங்கள்தான் நிறைய கிடைத்தன.

இந்த நிலையில் மறுபடியும் ஒரு தமிழ்ப் பட வாய்ப்பு கிடைத்திருப்பதால் பெரும் ஆர்வத்துடன் உள்ளார்.

நேற்று இன்று நாளை குறித்து ரவிகிருஷ்ணா கூறுகையில், இது ஒரு வித்தியாசமான படம். அதிரடியான படமாக இது இருக்கும். பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்திருக்கும். படத்துக்காக எனது எடையில் 15 கிலோவைக் குறைத்துள்ளேன்.

ஒரு இளைஞனின் வாழ்க்கையில் 3 நாட்களில் நடந்த முக்கிய சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை என்றார்.

இயக்குநர் லஷ்மிகாந்த் கூறுகையில், இந்தக் கதையை நான் திட்டமிட்டபோது எனக்கு ரவிகிருஷ்ணாதான் நினைவில் வந்தார். இது அவருக்கு ஏற்ற கதை. அவருடைய முழுத் திறமையும் இந்தப் படத்தில் வெளி வரும் என்றார்.

படம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாம். படத்துக்காக 5 பாடல்களை படமாக்கியுள்ளனர். சில காட்சிகள் மட்டுமே படம் பிடிக்க வேண்டியுள்ளதாம்.

டிசம்பரில் தமிழகம் மற்றும் ஆந்திராவில் ஒரே நாளில் படத்தைத் திரைக்குக் கொண்டு வருகிறார்கள்.

இந்தப் படத்தை முடித்து விட்டு நீ ஓட நான் துரத்த (அட்ரா, அட்ரா, இன்னா ஒரு டைட்டில்) என்ற படத்தில் நடிக்கவுள்ளார் ரவிகிருஷ்ணா.

இதை முடித்து விட்டு வரலாற்றுச் சித்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளாராம் ரவிகிருஷ்ணா. அப்படத்தை இயக்கப் போவது அவருடைய அண்ணன் ஜோதி கிருஷ்ணா.

Read more about: ravikrishna
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X