7ஜி ரெயின்போ காலனி ரவி கிருஷ்ணா எப்படி இருக்காரு பாருங்க.. 2ம் பாக ஷூட்டிங் செம சூப்பரா நடக்குதே!
சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படங்களிலேயே 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் ஒரு கல்ட் காதல் படம் என்றே சொல்லலாம். 2004ம் ஆண்டு வெளியான அந்த படத்துக்கு 22 ஆண்டுகள் தாண்டியும் ரசிகர்கள் உள்ளனர்.
7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தை மீண்டும் செல்வராகவன் உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் ரவி கிருஷ்ணா, அனஸ்வரா ராஜன், ஜெயராம், சுமன் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்துக்கான பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், டான்ஸர் தியா மெர்ஸி ரயிலில் படக்குழுவுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி: காதல் கொண்டேன் படத்துக்குப் பிறகு தனுஷை வைத்து இயக்காமல் செல்வராகவன் ரவி கிருஷ்ணாவை ஹீரோவாக்கி இயக்கிய படம் தான் 7ஜி ரெயின்போ காலனி. நா. முத்துகுமார் வரிகளில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. அனிதா மற்றும் கதிரின் அமர காதல் கதையை கொண்டாடாத ரசிகர்களே தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லலாம். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி படங்களில் ஹீரோயினாக நடித்த சோனியா அகர்வாலையே இயக்குநர் செல்வராகவன் திருமணம் செய்தார். ஆனால், ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

ரவி கிருஷ்ணா எப்படி இருக்காரு பாருங்க: 7ஜி ரெயின்போ காலனி, சுக்ரன், பொன்னியின் செல்வன், கேடி படங்களில் ஹீரோவாக அசத்திய ரவி கிருஷ்ணா அதன் பின்னர் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. பல வருடங்கள் கழித்து தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான ஆரண்ய காண்டம் படத்தில் சப்பை எனும் கதாபாத்திரத்தில் நடித்து இன்னொரு சிக்ஸர் விளாசினார். ஆனால், அதன் பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடிக்காமல் விலகி இருந்தார். இந்நிலையில், மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை டான்ஸர் தியா மெர்ஸி வெளியிட ரவி கிருஷ்ணா இத்தனை ஆண்டுகள் ஆகியும் அப்படியே இருக்காரே பாஸ் என ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
கதிரோட ஃபிரெண்டும் இருக்காரு: 7ஜி ரெயின்போ காலனி படத்தில் கதிரின் டார்ச்சர்களை சகித்துக் கொண்டு நண்பனாக லக்ஷ்மி நாராயணன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து பலரது நெஞ்சங்களில் இடம்பிடித்த சுமன் ஷெட்டியும் இந்த 2வது பாகத்தில் நடித்து வருகிறார். மேலும், ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஒட்டுமொத்த குழுவுடன் ரயில் செட்டப்பில் எடுக்கப்பட்ட பாடல் காட்சியின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. கூடிய சீக்கிரமே ஓஜி செல்வாராகவன் இஸ் பேக் என ரசிகர்கள் கொண்டாடப்போகின்றனர்.


Click it and Unblock the Notifications











