ரசிகர்களுக்கு ரவி மோகன் செய்திருக்கும் அட்வைஸ் என்ன தெரியுமா?.. ட்ரெண்டாகும் போஸ்ட்

சென்னை: நடிகர் ரவி மோகன் கடைசியாக காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்தார். அந்தப் படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க; ஹீரோயினாக நித்யா மேனன் நடித்திருந்தார். படத்துக்கு ஓரளவு நல்ல ரெஸ்பான்ஸே கிடைத்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் ஜீனி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் சூழலில்; ரவி போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

ஜெயம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரவி. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தெலுங்கு படத்தின் ரீமேக்காக அது அமைந்தாலும் முதல் படமே மெகா ஹிட்டானதாலும்; ரவியின் நடிப்பும் மிக அருமையாக இருந்ததாலும் அவருக்கு நல்லதொரு அடையாளம் கிடைத்தது.அந்தப் படத்துக்கு பிறகு தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் ரவி நடித்தது பெரும்பாலும் ரீமேக் படங்கள்தான். அந்தப் படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதன் காரணமாக குறுகிய காலத்திலேயே நல்ல நடிகர், ராசியான நடிகர் என்ற பெயரையும் பெற்றுவிட்டார்.

Ravi Mohan Tamil Cinema Kollywood

கிசுகிசுக்கள் இல்லாதவர்: ரவியை பொறுத்தவரை எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்தவர். முக்கியமாக தன்னுடைய சக நடிகர்களுடன் ஈகோ பார்க்காமல் பழகக்கூடியவர். அதனை விக்ரம், கார்த்தி, விஷால், ஆர்யா உள்ளிட்டோர் பல மேடைகளில் கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி ரவியை பார்க்கும்போது தங்கள் வீட்டு பிள்ளை போல் இருக்கிறார் என்று ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் சொல்வதுண்டு. அந்த ஒரு இமேஜும் ரவியின் வெற்றிக்கு காரணமாக திரைத்துறையினரால் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து: அவர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். முதலில் அந்தக் காதலுக்கு ரவியின் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. ஆனால் நடிகை குஷ்பூதான் ரவியின் வீட்டில் பேசி சம்மதிக்க வைத்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் சூழலில் ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் ரவி அறிவித்தார். தற்போது அவர்களது விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. விரைவில் அவர்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைக்கவிருக்கிறது.

என்ன காரணம்?: ஆர்த்தியை ரவி பிரிய பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக தான் சுத்தமாக மதிக்கப்படவே இல்லை என்று ரவியே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் தன்னுடைய உடைமைகளை ஆர்த்தி வீட்டிலிருந்து மீட்டு தருமாறு காவல் துறையில் புகாரும் அளித்திருந்தார். இதற்கிடையே அவர் கெனிஷா என்பவருடன் தொடர்பில் இருப்பதாகவும் ஒரு வதந்தி பரவியது. ஆனால் அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை; நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும்தான் என்று கூறி ரவி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அட்வைஸ்: ரவி கடைசியாக காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்தார். படத்துக்கு ஓரளவு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "2025ஆம் ஆண்டு ஆரம்பித்து ஒரு மாதம் ஓடிவிட்டது. பறந்துவிட்டது. இந்த வருடம் நீங்கள் எதை செய்தாலும் நிம்மதியாக செய்யுங்கள். சந்தோஷமாகவும், பொறுமையாகவும் செய்யுங்கள். நீங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எதை செய்தாலும் காதலோடு செய்யுங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X