கையை அறுத்துக் கொண்ட ரவி மோகன்.. ச்சீ.. 45 வயசுல அழகு பின்னாடி போவேனா? மகன்களை நினைத்து கண்ணீர் பேட்டி

சென்னை: நடிகர் ரவி மோகன் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் சிந்தி பல திடுக்கிடும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. அதாவது, “ எனது விவாகரத்து வழக்கு தொடங்கியதில் இருந்து எனது மகன்களைப் பார்க்க முடியவில்லை. அவர்களுக்கு போன் கூட கொடுப்பது இல்லை. பள்ளிக்கும் பாடி கார்டுகளுடன் தான் அனுப்புகிறார்கள், அவர்களைப் பார்க்க முடியவில்லை. நான் பெத்த குழந்தைகளைப் பார்க்க முடியவில்லை.

எனது மகன்களைப் பார்க்க முடியவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டு எனது கைகளை அறுத்துக் கொண்டேன். நான் போய்விடுவேன், ஆனால் எனது வாழ்க்கையை சீரழித்த அனைவரையும் பழி வாங்கிவிட்டுத்தான் போவேன். நான் எனது திருமண வாழ்க்கையில் நிம்மதியாக இருந்திருந்தால் நான் ஏன் தெறித்து ஓடி வரப்போகிறேன். எனக்கு அந்த வீட்டில் நடந்த துரோகம் அனைத்தும் தெரியும். அப்படி இருந்தும் நான் எல்லாவாற்றையும் பொறுத்துக் கொண்டு இருந்தேன்.

Ravi Mohan Breaks Down in Press Meet About Sons Divorce Pain and Shocking Self-Harm Revelation

நான் விவாகரத்து பெறுகிறேன் என்றதும் கெனிஷாவையும் என்னையும் சேர்த்து மிகவும் மோசமாக சித்தரித்து பரப்புகிறார்கள். அதற்காக ஒரு டீமே வைத்துள்ளார்கள். நான் நினைதால் அவர்கள் தங்கி உள்ள எனது வீட்டை காலி செய்துவிட்டு வெளியே போங்கள் என்று கூட சொல்ல முடியும், ஆனால் நான் சொல்லவில்லை காரணம் என்ன? எனது மகன்கள் மீது இருக்கும் பாசம். 45 வயதில் அழகு பின்னால் போய்விடுவேன் என்று எப்படி சிந்திக்க முடிகிறது? இது மட்டும் இல்லாமல் எனது முந்தைய திருமண வாழ்க்கையில் எனக்கு அன்பு கிடைத்திருந்தால் நான் ஏன் வெளியேறப்போகிறேன்” என்று அழுது கொண்டே பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X