ஒரே ஒரு பட்டன்தான்.. கெனிஷா போட்ட கெட்ட ஆட்டம்.. ரசித்துப் பார்த்த ரவி மோகன்!
சென்னை: ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரியிருக்கும் ரவி மோகன் பின்னணி பாடகியும், ஹீலருமான கெனிஷாவுடன் நெருக்கமாக பழகிவருகிறார். விரைவில் அவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. இருவரும் பொது நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாக வர ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தவகையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்த ரவி மோகன் இரண்டு மகன்களுக்கு தந்தையாக இருக்கிறார். குடும்பத்துடன் தனது வாழ்க்கையை சுமூகமாக ஓட்டிக்கொண்டிருந்தார். ஆனால் கடந்த சில வருடங்களாகவே அவர்களுக்குள் மனஸ்தாபம் ஆரம்பித்திருக்கிறது. நாளடைவில் சரியாகிவிடும் என்றுதான் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கருதினார்கள். அப்படி எதுவும் நடக்காமல் நாளுக்கு நாள் அந்த மனஸ்தாபம் விரிவடைந்தது.
பிரிந்த ரவி மோகன்: இனியும் ஆர்த்தியுடன் மிச்ச வாழ்க்கையை வாழ முடியாது என்று முடிவெடுத்த ரவி மோகன் கடந்த வருடத்தில் விவாகரத்தை அறிவித்தார். ஆனால் இந்த முடிவு தன்னிடம் ஆலோசிக்கப்படாமல் எடுக்கப்பட்டது என்று விளக்கமளித்தார் ஆர்த்தி. அதுமட்டுமின்றி எப்படியாவது அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதில் தீவிரமான முயற்சிகளையும் எடுத்துக்கொண்டே இருந்தார். ரவி அதற்கு பிடிகொடுக்கவே இல்லை.

தாய்தான் காரணமா?: ஆர்த்தியின் அறிக்கையை எல்லாம் பார்த்து அவருக்கு திரைத்துறையிலிருந்து குஷ்பூ உள்ளிட்டோர் ஆறுதலாகவும், ஆதரவாகவும் நின்றார்கள். அதேசமயம் ஆர்த்தியின் தாய் சுஜாதாவால்தான் அத்தனை பிரச்னையும்; ரொம்பவே வெறுத்துப்போய்தான் ரவி இந்த முடிவுக்கு வந்துவிட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள். நிலைமை இப்படி சென்றுகொண்டிருக்க மாதா மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவானம்சமாக கேட்டு ஆர்த்தி கோரிக்கை வைத்தது அவருக்கே பேக் ஃபயர் ஆனது. அவருக்கு சப்போர்ட் செய்தவர்கள் எல்லாம் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள்.
கெனிஷாவுடன் பழக்கம்: இதற்கிடையே ஆர்த்தியை பிரிந்ததற்கு கெனிஷாவுடன் ஏற்பட்ட பழக்கம்தான் காரணம் என்றும் சொல்லப்பட்டது. ரவியோ ஆரம்பத்தில் அதை திட்டவட்டமாக மறுத்தார். கெனிஷா தனக்கு நல்ல தோழி என்றும் இந்த விஷயத்தில் அவரை யாரும் உள்ளே இழுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் நாளாக நாளாக ரவிக்கும், கெனிஷாவுக்குமான பழக்கம் வலுவடைந்தது.
ரசித்து பார்த்த ரவி மோகன்: சமீபத்தில் நடந்த ரவி மோகனின் ஸ்டூடியோ திறப்பு விழாவில்கூட அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்தார் கெனிஷா. விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என திரைத்துறையினர் கூறுகிறார்கள். மேலும் இருவரும் ஒன்றாக பொது நிகழ்ச்சிக்கும் வர ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தவகையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
அப்போது இரண்டு பேரையும் ஒன்றாக நிற்க வைத்து புகைப்பட கலைஞர்கள் ஃபோட்டோ எடுத்தார்கள். அந்த சமயத்தில் வைபான கெனிஷா ஒரு நடனம் ஆடினார். அது ரவி மோகனை மட்ட்மின்றி அங்கிருந்த அனைவரையுமே ரசித்து பார்க்க வைத்தது. இந்த எனர்ஜியும் துறுதுறுத்தனமும்தான் கெனிஷாவிடம் ரவிக்கு பிடித்ததாக இருக்குமோ என்றும் பலர் கேள்வி எழுப்புகின்றார்கள்.


Click it and Unblock the Notifications











