40 லட்சம் கேட்ட ஆர்த்தி.. ரவி மோகன் எடுத்திருக்கும் முடிவு என்ன?.. நாளை என்ன அறிவிக்கிறார்?

சென்னை: ரவி மோகன் - ஆர்த்தி விவகாரத்தில் நித்தம் ஒரு காட்சி அரங்கேறிக்கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம்வரை ஆர்த்திக்கு சப்போர்ட் செய்துகொண்டிருந்தவர்கள் எல்லாம்; நேற்று அவர் ரவியிடம் மாதா மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்டதிலிருந்து அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ரவியும் தனது பங்குக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் நாளை ஒரு அறிவிப்பை வெளியிடப்போவதாக தெரிவித்திருக்கிறார்.

காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார் ரவி மோகன். ஆனால் ரவியின் அந்த முடிவு தனக்கு தெரியாது என்று கூறினார். இருப்பினும் அதனை கண்டுகொள்ளாத ரவி நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நடந்துவருகிறது. இதற்கிடையே எதையுமே எடுத்துக்கொள்ளவிடாமல்; வீட்டை விட்டு வெறும் காலோடு வெளியேறும் சூழலுக்கு தள்ளப்பட்டேன் என்று அந்த சமயத்தில் ரவி கூறினார்.

மறுத்த ரவி: அதேசமயம் ரவி இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கு அவருக்கும் கெனிஷாவுக்கும் இருக்கும் தொடர்புதான் காரணம் என்று பலரும் கூறினார். ஆனால் ரவியோ அப்படியெல்லாம் எதுவும் இல்லை; எங்களுக்குள் இருப்பது தொழில்ரீதியான நட்புதானே ஒழிய; வேறு எந்த விதமான உறவும் இல்லை என்பதை ஆணித்தரமாக கூறினார். இதன் காரணமாக இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக ஓய ஆரம்பித்திருந்தது. ஆனால் ரவியின் செயலால் மீண்டும் பேசுபொருளானது.

Ravi Mohan has announced that he will make an announcement tomorrow

என்ன ஆனது?: அதாவது சில நாட்களுக்கு முன்பு நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு கெனிஷாவுடன் ரவி வந்திருந்தார். இரண்டு பேரும் ஒரு நிறத்திலான உடையை அணிந்திருந்தார்கள். அதிலிருந்து இவ்விவகாரம் பூதாகரமாக வெடிக்க தொடங்கியது. அவர்கள் ஜோடியாக வந்ததை பார்த்த ஆர்த்தி ரவி முதலில் அறிக்கை வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து ரவி மோகனும் தனது பங்குக்கு அறிக்கை வெளியிட; தொடர்ந்து ஆர்த்தியின் தாய் சுஜாதா அறிக்கை வெளியிட்டார்.

ஆர்த்தியின் இறுதி அறிக்கை: தனது தாய் அறிக்கை வெளியிட்டவுடன் இறுதியாக ஒரு அறிக்கை என்று ஆர்த்தியும் ரிலீஸ் செய்தார். இப்படி மாறி மாறி அறிக்கைகள் வெளியிட்டு ஒருவரையொருவர் மூன்று பேரும் குற்றம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஒருகட்டத்தில் பொறுத்து பொறுத்து பார்த்த நெட்டிசன்களோ, ரவி - ஆர்த்தி - சுஜாதா - கெனிஷா ஆகிய நான்கு பேரையுமே கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம்: நிலைமை இப்படி இருக்க இரண்டு பேருக்குமான மத்தியஸ்த பேச்சுவார்த்தை முடிந்ததை அடுத்து நேற்று நீதிமன்றத்தில் ரவி மோகனும் ஆர்த்தியும் ஆஜரானார்கள். அப்போது தனக்கு மாதா மாதம் 40 லட்சம் ரூபாயை ஜீவனாம்சமாக ரவி தர வேண்டும் என்று ஆர்த்தி கோரிக்கை வைத்தார். இதனைப் பார்த்த ரசிகர்களோ என்னது மாதம் 40 லட்சம் ரூபாயா? இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லையா என்றெல்லாம் ஆர்த்தியை நோக்கி கேள்வியை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ரவியின் போஸ்ட்: ஆனால் ரவி மோகனோ கேஷுவலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட்டுகளை போட ஆரம்பித்திருக்கிறார். அதன்படி நேற்று 40 லட்சம் ரூபாய் விஷயம் ட்ரெண்டாகிக்கொண்டிருந்த சூழலில்; டெலிஃபோனில் பேசும்படியான ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டிருந்தார். அடுத்ததாக சுவற்றில் பந்தை அடித்து விளையாடிக்கொண்டே, 'நாளை பெரிய அறிவிப்பு இருக்கிறது. காத்திருங்கள்' என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ நாளை ஆர்த்தி விஷயத்தில் ஏதேனும் அறிவிப்பை வெளியிடுவாரோ என கேள்வி எழுப்பிவருகிறார்கள். அதேசமயம் ரவி மோகன் தனது பெர்சனல் வாழ்க்கை குறித்த அறிவிப்பை நாளை வெளியிடமாட்டார்; ஏதோ விளையாட்டு சம்பந்தமான அறிவிப்பைத்தான் விடப்போகிறார் என்றும் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X