10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும்.. நீதிமன்றத்தில் ரவி மோகன் வைத்த செம ட்விஸ்ட்.. என்ன ஆச்சு ?

சென்னை: ரவி மோகன் பிஸியாக நடித்துவருகிறார். ஒருபக்கம் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெறப்போகும் அவர்; இன்னொரு பக்கம் கரியரில் புத்துணர்ச்சியுடன் கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அவரது கைவசம் இப்போது கராத்தே பாபு, ஜீனி உள்ளிட்ட படங்கள் இருக்கின்ரன. இந்நிலையில் பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ரவி மோகன் தரப்பு நீதிமன்றத்தில் வாதம் வைத்திருக்கிறது.

கோலிவுட்டின் குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார் ரவி மோகன். பெரிதாக எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்த அவர்; கடந்த வருடத்திலிருந்து ஹெட்லைன்ஸாக இருந்துகொண்டிருக்கிறார். தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரிய அவர்; கெனிஷாவுடன் பழகிவருகிறார். அநேகமாக இவர்கள் இரண்டு பேரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்த்தி கேட்ட ஜீவனாம்சம்: நீதிமன்றத்தில் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடந்துவருகிறது. ரவி மோகன் தனக்கு மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டும் என்று ஆர்த்தி தரப்பு வாதத்தை முன்வைத்தது பெரிய பேசுபொருளானது. இந்த வழக்கு, வீவாகரத்து உள்ளிட்டவைகள் எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும்; மறுபக்கம் தனது கரியரில் அதீத கவனத்தை அவர் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் என கோலிவுட்டின் கூறுகிறார்கள்.

Ravi Mohan has told the court that he wants Compensation Rs 10 crore
Photo Credit:

ரவியின் படங்கள்: ரவி மோகன் கடைசியாக காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்திருந்தார். படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவரது நடிப்பில் ஜீனி, கராத்தே பாபு ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. அதுமட்டுமின்றி தனது சகோதரர் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் படத்தின் இரண்டாவது பாகத்திலும் அவர் நடிக்கவிருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கும் ரவி; யோகி பாபுவை வைத்து ஒரு படம் இயக்கவும் செய்கிறார்.

ரவி மோகனுக்கு எதிராக வழக்கு: சூழல் இப்படி இருக்க பாபி டச் கோல்டு யுனிவர்சல் என்ற பட தயாரிப்பு நிறுவனம் ரவி மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில், "தங்கள் நிறுவனத்துக்கு படம் நடித்து தருவதாக கூறிய ரவிக்கு; 15 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு 6 கோடி ரூபாய் முன் பணமாக கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் தனது சொந்த பட தயாரிப்பு நிறுவனத்தில் அந்தப் பணத்தை போட்டிருக்கிறார். படமும் நடித்துக்கொடுக்கவில்லை. எனவே அவர் தயாரிக்கவிருக்கும் ப்ரோ கோல்ட் என்ற படத்துக்கும்; அவர் வேறு எந்த நிறுவனத்துக்கும் நடிக்க தடை விதிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.

ரவி மோகன் வைத்த ட்விஸ்ட்: இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ரவி மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அந்த நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்தும் படப்பிடிப்பு பணிகளை தொடங்கவில்லை. எனவே அந்நிறுவனம் நஷ்ட ஈடாக பத்து கோடி ரூபாய் வழங்க வேண்டும்" என்ற வாதத்தை முன்வைத்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதில் அப்துல் குத்தூஸ், 'இவ்வழக்கில் ரவி மோகன் பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டு; வழக்கு விசாரணையை ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனை கவனித்த ரசிகர்களோ ஏற்கனவே விவாகரத்து வழக்கு போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் இந்த வழக்கு வேற என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X