பராசக்தி ஆடியோ லான்ச்சில் ஆர்த்தி விஷயத்தை இழுத்த ரவி மோகன்.. என்ன இப்படி பேசிருக்காரு?

சென்னை: தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். கடைசியாக அவரது நடிப்பில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியானது. அப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கும் பராசக்தி படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இப்படம் ஜனவரி பத்தாம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஜெயம் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரவி இதுவரை ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியானது. அப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்தார். சுமாரான வரவேற்பையே அந்தப் படம் பெற்றது. அடுத்ததாக ஹீரோவாக அவர் ப்ரோ கோட், ஜீனி, கராத்தே பாபு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். மூன்று படங்களும் வெவ்வேறு ஜானர்களில் உருவாகிவருகின்றன.

பராசக்தியில் வில்லன்: இத்தனை நாட்கள் ஹீரோவாக மட்டும் நடித்துவந்த அவர்; சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கும் பராசக்தி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். முதன்முறையாக ரவி வில்லனாக நடித்திருப்பதன் காரணமாக; எந்த மாதிரியான நடிப்பை கொடுத்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறார்கள் ரசிகர்கள். படமானது ஜனவரி பத்தாம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.

Ravi Mohan Indirectly Refers to Ex-Wife Aarti During Parasakthi Audio Launch Speech
Photo Credit:

குவியும் பாராட்டுக்கள்: பராசக்தியில் திருநாடன் என்ற கேரக்டரை ஏற்றிருக்கிறார். இது கண்டிப்பாக அவரது திரை பயணத்தில் முக்கியமான ரோலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பராசக்தி பற்றி பேசும் அனைவருமே இந்த மாதிரியான ஒரு ரோலை ஏற்று நடித்ததற்கு ரவியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் என்றுதான் கூறிவருகிறார்கள். அந்த அளவுக்கு திருநாடன் கேரக்டரை இயக்குநர் சுதா கொங்கரா ஃபவர் ஃபுல்லாக எழுதியிருக்கிறாராம். இந்தப் படத்துக்கு பிறகு மேற்கொண்டு அவர் வில்லனாக நடிக்க அழைப்புகள் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரவி மோகனின் பேச்சு: இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் பேசிய ரவி மோகன், "பராசக்தி படத்தை நான் செய்ததற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. ஒன்றே ஒன்றுதான். இந்தப் படம் சுயமரியாதையை காப்பாற்றுவதைப் பர்றிய படம். எனது வாழ்க்கைஇல் நானும் சுயமரியாதையை திரும்ப பெறுவதற்காகத்தான் போராடினேன். எல்லோருக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். சுயமரியாதையை மட்டும் எப்போதும் விட்டுவிடாதீர்கள்" என்றார்.

ஆர்த்தி மீது அட்டாக்?: ரவியின் இந்தப் பேச்சு ரசிகர்களிடம் பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார் ரவி. வீட்டு வேலைக்காரர்களுக்கு கொடுக்கும் மரியாதையைகூட எனக்கு ஆர்த்தி தரப்பு தரவில்லை. அதன் காரணமாகத்தான் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்திருந்தார். தற்போது பராசக்தி ஆடியோ லான்ச்சில் சுயமரியாதையை பெற போராடினேன் என்று மறைமுகமாக ஆர்த்தி விஷயத்தைத்தான் அவர் இழுத்திருப்பதாக அனைவருமே சோஷியல் மீடியாக்களில் சொல்லிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X