கெனிஷாவை சென்னையில் இருந்தே அனுப்பிவிட்டீர்கள்.. சோகத்தில் ரவி மோகன் எடுத்த முடிவு.. விபரீதமா இருக்கே
சென்னை: நடிகர் ரவி மோகன் தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர். கடைசியாக இவர் நடித்து வெளியான படம் பராசக்தி. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர் தெரிவித்த கருத்துக்கள் ரசிகர்கள் பலரையும் திடுக்கிடச் செய்துள்ளது.
அதாவது, “ எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்க மாட்டேன் என்றும் என் படங்கள் ரிலீஸ் ஆகாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், நான் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தது என்னுடைய தவறு. என் குடும்பத்தை சீண்டினால் நான் சும்மா இருக்க மாட்டேன். கெனிஷாவை காலி செய்து சென்னையை விட்டே அனுப்பிவிட்டீர்கள், சாதுவாக இருந்த என்னை சிலர் சீண்ட முயற்சிக்கிறார்கள், இது நல்லதுக்கு அல்ல” என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பேட்டி பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. ரவி மோகன் தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர்களின் விவாகரத்து வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

என்னை சரியாக புரிந்து கொண்டிருந்தால் நான் ஏன் எனது திருமண வாழ்க்கையில் இருந்து வெளியே வரப்போகிறேன். எனக்கு கெனிஷாவிடம் இருந்து அன்பு கிடைத்தது. அதையும் தற்போது கேவலமாக பேசி, அவர் தற்போது சென்னையில் இருந்து கிளம்பி சென்றுவிட்டார். இது மட்டும் இல்லாமல் எனக்கு 45 வயது ஆகிறது. நான் இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. நான் இப்போது அழகைப் பார்த்து ஒரு பெண்ணின் பின் சென்று விடுவேனா? அப்படி என்றால் அழகான பெண்களுடன் நடிப்பதுதான் எனது வேலையே, அப்போது எல்லாம் போகாதவன் இப்போது போகிறேன் என்று கூறுவதை எல்லாம் பொருத்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் இனிமேல் பொருத்துக் கொள்ள மாட்டேன்.


Click it and Unblock the Notifications