மகன் பிறந்தநாள்.. ரவி மோகன் என்ன செஞ்சிருக்காரு பாருங்க?.. செம பாசம்

சென்னை: ரவி மோகன் கடந்த வருடம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். இப்போது அவர்களது விவாகரத்து மனு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. எப்படியும் சட்டப்பூர்வமாக அவர்கள் விவாகரத்து பெற்றுவிடுவார்கள் என்றே அனைவராலும் கருதப்படுகிறது. இந்நிலையில் நேற்று ரவியின் மூத்த மகன் ஆரவ் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

எடிட்டர் மோகனின் மகனான ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். முதலில் இந்தத் திருமணத்துக்கு ரவியின் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. ஆனால் தன்னுடைய காதலில் கொண்டிருந்த உறுதியை இரண்டு பேருமே விடாததால் வீட்டில் பச்சை கொடி சிக்னல் கிடைத்தது. அவர்களுக்கு மொத்தம் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு மகனான ஆரவ் டிக் டிக் டிக் படத்தில் ரவியுடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிந்த ரவி: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக அவர்கள் வலம் வந்துகொண்டிருந்தார்கள். பல விழாக்கள், பேட்டிகளில் ஆர்த்தியும் ரவியும் கலந்துகொண்டார்கள். ஒருவரையொருவர் காதலோடு புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை அவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிவில் கொண்டு சென்று நிறுத்தியது. ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் ரவி அறிவித்தார்.

Ravi Mohan met his son his birthday Here are details
Photo Credit:

ஆர்த்தியின் அறிக்கை: ஆனால் முதலில் அந்த பிரிவை ஆர்த்தி ஏற்றுக்கொள்ளவில்லை. சூழல் இப்படி இருக்க அந்த விஷயம் ஓய்ந்திருந்தது. அதனையடுத்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு ரவி மோகன் கெனிஷாவுடன் வந்தார். அவர்களது அந்த வருகை இந்த பிரச்னையை மீண்டும் கிளப்பியது. உடனடியாக ஆர்த்தி ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், ரவி மோகன் தந்தை என்ற பொறுப்பிலிருந்து நழுவிவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.

மறுத்துவிட்டார்கள்: ஆர்த்தியின் அறிக்கையை அடுத்து ரவியோ தன் பங்குக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், 'எனது மகனுக்கு கார் விபத்து நடந்தது. அப்போதுகூட என்னை எனது மகனை பார்ப்பதற்கு விடவில்லை. பவுன்சர்களை வைத்து தடுத்துவிட்டார்கள்' என்று சொல்லி ஒரு குண்டை போட்டார். இப்படி மாற்றி மாற்றி இருதரப்பும் அறிக்கை வெளியிட்டுக்கொண்டே இருந்தது.

மகனை சந்தித்த ரவி மோகன்: இந்நிலையில் ரவி தனது மகன்களை சந்திக்கிறாரா இல்லையா அவருக்கு அந்த அனுமதி கிடைக்கிறதா என பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பிக்கொண்டே இருந்தார்கள். நிலைமை இப்படி சென்றுகொண்டிருக்க ரவியின் மூத்த மகன் ஆரவ் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி அவரை நேரில் சந்தித்த ரவி தனது வாழ்த்தினை தெரிவித்தார். மேலும் சில பரிசு பொருட்களையும் அவர் வழங்கியதாக கூறப்படுகிறது.

புகைப்படங்கள்: மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ரவி, 'என்னுடைய பெருமை.. என் குரும்பாக்கள்' என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன. இதற்கிடையே தனக்கும் மகன்களுக்கும் சேர்த்து மாதா மாதம் 40 லட்சம் ரூபாயை ரவி மோகன் ஜீவனாம்சமாக தர வேண்டும் என்று ஆர்த்தி நீதிமன்றத்தில் கூறியிருப்பது நினைவுகூரத்தக்கது. ஆர்த்தி அப்படி 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்டதற்கு ஒருதரப்பினர் ஆதரவையும், மறுதரப்பினர் கடும் ட்ரோலையும் கொடுத்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X