கெனிஷாவுடன் போகும்போதும் மகன்களை மறக்காத ரவி மோகன்.. விடாத தந்தை பாசம்.. கெனியும் ஃபுல் சப்போர்ட்

சென்னை: ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்திருந்த ரவி மோகன்; அவரை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார். அவரை பிரிந்த ரவி; இப்போது கெனிஷாவுடன் நெருக்கம் காட்டிவருகிறார். கண்டிப்பாக இரண்டு பேருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க ரவி - ஆர்த்தியின் பிரிவு அவர்களது இரண்டு மகன்களின் மனநிலையை கண்டிப்பாக அழுத்தத்துக்கு உள்ளாக்கும் என்பது பலரது கருத்து.

ஜெயம் படத்தில் அறிமுகமாக் ஜெயம் ரவியாக ஜொலித்த ரவி; இப்போது ரவி மோகனாக மாறியிருக்கிறார். அவரது பெயரில் மட்டுமில்லாமல்; பெர்சனல் வாழ்க்கையிலும் மாற்றங்கள் நடந்திருக்கின்றன. முதலில் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தார். அந்தத் திருமணத்துக்கு முழு காரணமே நடிகை குஷ்பூதான் என்று சொல்லப்படுகிறது. சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கையில் விரிசல்கள் வர ஆரம்பித்தன.

பிரிந்த ரவி மோகன்: இனியும் ஆர்த்தியுடன் வாழ்வது ஒத்து வராது என்று முடிவு செய்து கடந்த வருடம் பிரிவை அறிவித்தார். முதலில் இந்தப் பிரச்னையை தீர்த்து சேர்ந்து வாழ முயன்ற ஆர்த்திக்கு நம்பிக்கை போனதால்; இவரும் பிரிவுக்கு இசைந்துவிட்டு மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சமாக கேட்டு கோரிக்கை வைத்தார். இதற்கிடையே ரவிக்கும் தனக்கும் பிறந்த இரண்டு மகன்களையும் தன்னுடைய அரவணைப்பிலேயே வளர்த்துவருகிறார்.

Ravi Mohan Moves On With Kenisha After Aarthi Split Tirupati Video Goes Viral
Photo Credit:

கெனிஷாவுடன் நெருக்கம்: ரவியை பொறுத்தவரை ஆர்த்தியை பிரிந்த பிறகு கெனிஷாவுடன் நெருக்கம் காட்டிவருகிறார். தற்போது அவருக்கு அனைத்துமாய் விளங்குகிறார் கெனி. இரண்டு பேரும் எங்கே சென்றாலும் ஜோடியாகவே இருக்கிறார்கள். கண்டிப்பாக ரவி - கெனிஷா திருமணம் விரைவில் நடைபெறும் என்பது திரைத்துறையில் பலரது கருத்து. கெனிஷாவை திருமணம் செய்தாலும் ஆர்த்திக்கும் தனக்கும் பிறந்த மகன்களை ரவி விட்டுக்கொடுக்கமாட்டார். அதற்கு கெனிஷாவும் முழு ஆதரவை கொடுப்பார் என்றே தெரிகிறது.

திருப்பதியில் ஜோடி: சமீபத்தில்கூட ரவியுடன் திருப்பதிக்கு சென்றார் கெனிஷா. இரண்டு பேரும் ஜோடியாக சென்று சாமி தரிசனம் செய்தார்கள். அதற்கு பிறகு பேசிய ரவி, "எல்லோருக்கும் வணக்கம். திருப்பதி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு வருகிறோம். எப்போதும் போல் மன நிம்மதிக்காகவும், சந்தோஷத்துக்காகவும், எனது குழந்தைகளுக்காகவும், அவர்களது உடல்நிலைக்காகவும், எனது அப்பாவுக்காகவும் வேண்டிக்கொண்டேன்" என்றார்.

ரசிகர்கள் செய்யும் அட்வைஸ்: இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி, மகன்கள் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கும் ரவி; அவர்களை மனதில் நினைத்தாவது ஆர்த்தியுடனான பிரிவை தவிர்த்திருக்கலாம் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். அதேசமயம் இன்னொரு தரப்பு ரசிகர்களோ, 'ரவியிடமிருந்து குழந்தைகளை பிரிக்காத கெனிஷாவையும் இதில் பாராட்ட வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X