ரவி மோகனுக்கு 'தேவி ரத்னா' விருது.. இணையத்தில் ஹாட் டாப்பிக்!

சென்னை: பாலக்காட்டில் நடைபெற்ற உத்சவ் 2026 விழாவில் நடிகர் ரவி மோகனுக்கு 'தேவி ரத்னா' என்ற உயரிய கௌரவ விருது வழங்கப்பட்டது. மேலும் ரொக்கப்பரிசும், தங்க நினைவு சின்னமும் பரிசாக வழங்கப்பட்டது.

ரவி மோகன்: பாலாக்காடு மீன்குளத்தி பகுதியில் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த விழாவில் இந்த முறை ரவி மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்ட ரவி மோகனுக்கு மேளதாள வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில்,அவருடன் பாடகி கெனிஷாவும் கலந்து கொண்டார். இருவரும் மேடையில் இணைந்து குணா படத்தின் பிரபலமான "கண்மணி அன்போடு காதலன்" பாடலை பாடிய தருணம் நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது. அதோடு மட்டுமில்லாமல் மேடைக்கு செல்லும் முன் கெனிஷா ரவி மோகனிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு மேடையில் பாடத் தொடங்கினார். இணையத்தில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

Jayam Ravi Singer Kenisha photo

தேவி ரத்னா விருது: இந்த விழாவில். கலை, கலாச்சாரம் மற்றும் சமூக வாழ்வில் சிறப்பான பங்களிப்பு செய்து வரும் பிரபலங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'தேவி ரத்னா' ரவி மோகனுக்கு வழங்கப்பட்டது. விருதுடன் ரூ.1,00,001 ரொக்கப் பரிசு, தங்க சின்னம், பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பலகையும் வழங்கப்பட்டது. இந்த விருது, இந்த ஆண்டு ரவி மோகனுக்கு வழங்கப்பட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து சமூக வலைதளங்களில் ரவி மோகனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கைவசம் உள்ள படம்: தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள ரவி மோகன், தற்போது பல முக்கியமான படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த "பராசக்தி" படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அவர், தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக கராத்தே பாபு, ஜீனி, ஆன் ஆர்டினரி மேன் போன்ற படங்களில் கைவசம் வைத்துள்ளார். இதனால் ரவி மோகனுக்கு 2026ஆம் ஆண்டு மிக முக்கியமான ஆண்டாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X