மக்களை நம்பாதவன் மக்களை ஆள முடியாது.. அரசியல் பேசிய ரவி மோகன்.. அடடே இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சென்னை: நடிகர் ரவி மோகன் தற்போது நடிப்பு, தயாரிப்பு இயக்கம் என செம பிஸியாக இருக்கிறார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லைஃப் அப்டேட்களை தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில் அண்மையில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தான் நடித்த பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற வசனத்தை பேசினார். அது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ரவி மோகன் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகர்களில் ஒருவர். இவருக்கு என்று இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பெரும்பாலும் ஃபேமிலி ஆடியன்ஸ் தான். ரவி மோகன் இதனாலே தனது படங்களின் கதைத் தேர்வை பார்த்து பார்த்து செய்து வந்தார். மேலும் தனது கதாபாத்திரத்திற்காக பெருமளவு மெனக் கெடக்கூடியவர். உடல் எடையைக் கூட்டுவது குறைப்பது என தொடர்ந்து மெனக்கெட கூடியவர் ரவி மோகன்.

Ravi Mohan Recreates Ponniyin Selvan Dialogue on Stage Viral Video Sparks Election Debate
Photo Credit:

தனது விவாகரத்து அறிவிப்புக்குப் பின்னர் ஜெயம் ரவி என்ற பெயரை ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டார் தற்போது ரவி மோகன் என்றே அறியப்படுகிறார். மேலும் இவரது நடிப்பில் கராத்தே பாபு என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இன்னும் 20 தினங்கள் மட்டும் தான் அவரது படப்பிடிப்பு இருக்கிறது என்றும், ஆனால் அதற்கான நாட்களை அவர் இன்னும் ஒதுக்கித் தராமல் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதற்கான காரணங்கள் என்று இதுவரை உறுதியாக எதுவும் வெளிவரவில்லை.

செம பிஸி: இப்படி இருக்கையில் தனது ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ப்ரோ கோட் படத்திலும் நடித்து வருகிறார். அவரது இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்டினரி மேன் படத்தையும் இயக்கி வருகிறார். இப்படி இருக்கையில் அவர் சமீபத்தில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் தனது படத்தில் இடம்பெற்ற சில வசனங்களை பேசினார்.

Ravi Mohan Recreates Ponniyin Selvan Dialogue on Stage Viral Video Sparks Election Debate
Photo Credit:

அரசியல் வசனம்: உதாரணத்திற்கு, பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்ற மக்களை நம்பாதவன் மக்களை ஆள முடியாது என்ற வசனத்தையும், கராத்தே பாபு படத்தின் டீசரில் இடம் பெற்ற வசனமான, நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன், நான் அரசியலையே தொழிலா பண்றவன்" என்ற வசனத்தையும் பேசினார். ரசிகர்கள் கேட்டுக் கொண்டதால் ரவி மோகன் பேசிய இந்த வசனங்கள் நெருங்கி வரும் தேர்தலோடு சிலர் முடிச்சு போட்டு வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் அவருடன் அவருடைய தோழி பாடகி கெனிஷாவும் கலந்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X