Parasakthi: லட்டு மாதிரி இருக்காரு அதர்வா.. லவ் பண்ண ஆரம்பிச்சிடுவீங்க.. ரவி மோகன் ரொமாண்டிக் பேச்சு!
சென்னை: சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் 10 நிமிட காட்சி இன்று வள்ளுவர் கோட்டத்தில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அந்த விழாவில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், இயக்குநர் சுதா கொங்கரா, நடிகர்கள் ரவி மோகன், சிவகார்த்திகேயன், அதர்வா, ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.
வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி உலகத்தையே கண்காட்சியாக உருவாக்கியுள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பொதுமக்களும் நேரில் சென்று பார்க்கும்படி இந்த பராசக்தி கண்காட்சி உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரவி மோகன் பேசும் போது அதர்வாவை வர்ணித்து பேசியது தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்: பராசக்தி படத்தை பற்றி பல விஷயஞ்களை இசை வெளியீட்டு விழாவில் பக்கம் பக்கமாக பேச சேமித்து வைத்து இருக்கிறேன். ஆனால், இங்கே ஒன்றுமே பேசாமல் போய்விட்டால், ரவி மோகன் ரொம்ப நல்லா பேசுனாரு, சிவகார்த்திகேயன் பேசாமல் திருப்பிக்கிட்டாரு என யூடியூப் சேனல்களில் டைட்டில் போட்டு அடிச்சிடுவாங்க என கலகலப்பாக சிவகார்த்திகேயன் பேசினார். அதர்வாவின் முதல் பட விழாவில் நான் விஜேவாக இருந்தது எல்லாம் நினைவுக்கு வருகிறது. அவருடன் ஒரு பிரதர் பாண்டிங் இந்த படப்பிடிப்பின் போது ஏற்பட்டது. அவர் டெசர்ட் எல்லாம் சாப்பிட்டு வொர்க்கவுட் செய்துவிடுவார். நாமளும் ஆசையா வாங்கி சாப்பிட்டு, தூங்கிட்டு மறுநாள் வெயிட் போட்டு இருப்போம் என்றார்.

லட்டு போல இருக்காரு அதர்வா: சிவகார்த்திகேயனுக்கு முன்னதாக ரவி மோகன் மேடை ஏறி பேசும் போது, ஹீரோயின் ஸ்ரீலீலாவை விட்டு விட்டு அதர்வாவை லட்டு போல இருக்காரு என்றும் பார்த்தாலே லவ் பண்ண தோணும் என ரவி மோகன் பேச அதர்வா வெட்கப்பட்டு சிரித்த காட்சிகள் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது. பாணா காத்தாடி படத்தில் பார்த்தது போலவே இன்னமும் செம க்யூட்டாக அதர்வா இருப்பதை பலரும் பாராட்டினர். பராசக்தி படத்தில் அவருடைய கதாபாத்திரம் ரொம்பவே ஸ்பெஷல் ஆன ஒன்றாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











