நான் பார்க்காத ஹீரோயினா?.. என்னோட வேலையே அழகான ஹீரோயின் கூட நடிக்கிறதுதான்.. ரவி மோகன் காட்டம்!
சென்னை: ஜெயம், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், கோமாளி என பல படங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்த ரவி மோகன் இப்படி அடித்துக் கொண்டு அழுவதை பார்க்கவே பாவமாக உள்ளது என ரசிகர்கள் ஆதரவு பதிவுகளை போட ஆரம்பித்துள்ளனர்.
இப்படியொரு ஹீரோ வெளிப்படையாக தனது மென்டல் ஹெல்த் கெட்டு விட்டதாக பத்திரிகையாளர்கள் முன்பாக வெளிப்படையாக தனது எதிர்காலத்தை பற்றி எந்தவொரு கவலையுமின்றி டாக்ஸிக் வாழ்க்கையில் இருந்து விடுபட வேண்டும் என புலம்பி அழுது பேசுவதை பார்த்த பின்னரும் கூட அவருக்கான விவாகரத்து வழக்கு விரைந்து முடிக்கப்படவில்லை என்றால் அவருக்கு ஏதாவது ஆனால் அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தான் பொறுப்பாக வேண்டும் என ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

ஆர்த்தி ரவியை விட்டு விட்டு கெனிஷாவை தேடி ரவி மோகன் சென்றார் என்று சொல்லி வரும் நிலையில், அழகில் மயங்கி செல்லக் கூடிய ஆளா நான் என்றும் நான் பார்க்காத ஹீரோயினா? என பொதுவெளியில் வெடித்துப் பேசியுள்ளார் ரவி மோகன்.
சதா முதல் த்ரிஷா வரை: ஜெயம் படத்தில் முதன் முதலாக சதாவுடன் இணைந்து நடித்தார். ஹன்சிகா, த்ரிஷா, நயன்தாரா, ஜெனிலியா, சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, நிவேதா பெத்துராஜ் என ஏகப்பட்ட ஹீரோயின்களுடன் இணைந்து பல படங்களில் ரவி மோகன் நடித்துள்ளார். அப்போதெல்லாம் நடிகைகளின் அழகில் மயங்கி அவர்கள் பின்னால் போய் விட்டேனா? நான் என்ன அழகில் மயங்குகிற ஆளா? நான் பார்க்காத ஹீரோயினா என ரவி மோகன் மீடியாவுக்கு முன்னாள் கண்ணீர் விட்டு கதறி அழுவதை பார்க்கவே முடியவில்லை என ரசிகர்கள் தேற்றத் தொடங்கி உள்ளனர்.

என்னோட வேலையே அதுதான்: ரவி மோகன் போன்ற ஒரு ஆணழகன் உடன் நடிக்க வேண்டும் என பல நடிகைகள் போட்டிப் போட்டுக் கொண்டு பல படங்களில் நடித்துள்ளனர். கெனிஷா அழகா இருக்காருன்னு அவ அழகில் மயங்கி போய்விட்டேனா? நான் பார்க்காத ஹீரோயினா? என்னோட வேலையே அதுதான் ஏகப்பட்ட அழகான ஹீரோயின்களுடன் நடித்திருக்கேனே என தனது பக்க நியாயத்தையும் தன்னை ஆர்த்தி ரவி எப்படி எல்லாம் இத்தனை ஆண்டுகள் ஆட்டிப் படைத்து வந்தார் என்றும் கெனிஷா தன்னை விட்டு விலகிச் செல்ல அவர் செய்த சைபர் புல்லிங் தான் காரணம் என்றும் அதற்கு மூன்றெழுத்து இட்லி நடிகை துணை என வெடித்துப் பேசியுள்ளார்.
ரவி மோகனுக்கு ஆதரவு தேவை: நடிகர் ரவி மோகனை அவரது வீட்டில் அப்பாவும் விலக்கி வைத்து விட்டார் என்றே தெரிகிறது. கெனிஷாவும் இல்லாத சூழலில் தவறான முடிவு எதையும் நடிகர் ரவி மோகன் எடுத்து விடக் கூடாது என்றும் அவருக்கு உரிய பாதுகாப்பை நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இந்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
டாக்ஸிக் வாழ்க்கை வேண்டாம்: இந்தளவுக்கு ஒரு மனுஷன் காயப்பட்டு பேசும் போது அவனை மீண்டும் குடும்பத்துடன் சேர்த்து வைக்க நினைப்பது முட்டாள்த்தனம். அவருக்கு இந்த டாக்ஸிக் வாழ்க்கை வேண்டாமென்றால் அவரை விட்டு விலகிவிடுவதே நல்லது எனக் கூறி வருகின்றனர். இத்தனை நாட்கள் கெனிஷாவுடன் ஜாலியாத்தானே இருந்தார் ரவி மோகன். இப்போ திடீரென அவரை பிரிந்து அவர் ஏன் சென்றார். இருவருக்கும் இடையே என்ன பிரச்னை நடந்தது என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications