பராசக்தி பட டப்பிங்கை ஆரம்பித்த ரவி மோகன்.. சிங்க கர்ஜனை பொங்கலுக்கு அதிரப் போகுதாம்!
சென்னை: ஜெயம் படத்தில் தொடங்கி இத்தனை வருடங்களாக ஹீரோவாக நடித்து வந்த ரவி மோகன் பொன்னியின் செல்வன் படத்தில் அத்தனை முன்னணி நட்சத்திரங்கள் இருந்தாலும் டைட்டில் ரோலில் நடித்தவர், தற்போது முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி பராசக்தி படம் வெளியாகிறது. டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் இன்பன் உதயநிதி வெளியிடும் இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் அதர்வா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தளபதி விஜய்யின் ஜன நாயகன் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஜன நாயகன் மற்றும் பராசக்தி படங்களுக்கு இடையே பொங்கல் பாக்ஸ் ஆபீஸ் போட்டி வெடிக்க உள்ளது.
பகவந்த் கேசரியாக இருந்தால்: ஜன நாயகன் திரைப்படம் பகவந்த் கேசரி தான் என ஒட்டுமொத்த டீகோடிங்கையும் ரசிகர்கள் தளபதி கச்சேரி பாடல் வெளியானதும் மமிதா கழுத்தில் இருக்கும் மணி வரைக்கும் நோட் செய்து நொங்கெடுத்து விட்டனர். பகவந்த் கேசரி ஏற்கனவே தமிழ் டப்பிங்கிலேயே உள்ள நிலையில், விஜய் மீண்டும் அந்த படத்தை ரீமேக் செய்து நடித்தால் பொங்கலுக்கு பெரிதாக ரசிகர்களை படம் கவருமா என்பது சந்தேகம் தான். 9ம் தேதி ஜன நாயகன் படம் வெளியாகி நெகட்டிவ் டாக்ஸ் ஒருவேளை வந்துவிட்டால் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் பராசக்தி படத்துக்கு அது பெரும் வாய்ப்பாக மாறிவிடும்.
பராசக்தி டப்பிங்: தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என ரவி மோகன் சமீப காலமாக ரொம்பவே பிசியாக இருந்து வரும் நிலையில், பராசக்தி படத்துக்கான டப்பிங் பணிகளை ஆரம்பித்துள்ளார். அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவை டான் பிக்சர்ஸ் சற்றுமுன் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ரவி மோகன் இந்த படத்தில் சிங்க கர்ஜனை செய்யப் போவதை விரைவில் வெளியாகவுள்ள படத்தின் டீசர் மற்றும் டிரைலரில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த அடி அலையே: ஆரம்பத்தில் சூரரைப் போற்று பாடல் போல இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பினாலும், எங்க அண்ணன் பாடலை வைத்து ட்ரோல் செய்தாலும், போக போக ஜி.வி. பிரகாஷின் மேஜிக் மற்றும் சிவகார்த்திகேயனின் வசீகரத்தால் அடி அலையே பாடல் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜன நாயகன் vs பராசக்தி எப்படி இருக்கப் போகிறது என்றும் ரவி மோகன் vs சிவகார்த்திகேயன் ஃபேஸ் ஆஃப் எப்படி இருக்கும் என்பதையும் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











