நல்லதே நடக்கும்.. திருப்பதி சாமி தரிசனத்தை முடித்துவிட்டு தவறாமல் வந்து ஓட்டுப்போட்ட ரவி மோகன்!
சென்னை: இன்று அதிகாலை திருப்பதியில் கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியான நிலையில், ரவி மோகன் ஓட்டுப்போடவில்லையா? என பலரும் கேள்வி எழுப்பினர். கண்டிப்பாக மாலைக்குள் சென்னைக்குத் திரும்பி ஓட்டுப் போடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்றுமுன் தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர்கள் மட்டுமின்றி இந்த முறை அதிகளவில் நடிகைகளும் தங்கள் ஓட்டுக்களை காலை முதல் போட்டு வருகின்றனர். வெளிமாநிலங்களில் படப்பிடிப்பில் இருந்தாலும், வெளிநாட்டில் கார் ரேஸில் இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு ஷார்ப்பாக வந்து சினிமா பிரபலங்கள் எந்தவொரு சாக்கு போக்கும் சொல்லாமல் வாக்களித்து வருகின்றனர்.

அதிகளவிலான வாக்கு சதவீதங்கள் பதிவாக பிரபலங்கள் காலை முதல் உற்சாகமாக வாக்களித்து வருவதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
திருப்பதியில் சாமி தரிசனம்: நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் இருவரும் இன்று காலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்தனர். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. சிலர் ஓட்டுப் போடாமல் திருப்பதிக்கு சென்று விட்டாரே ரவி மோகன் என ட்ரோல்களும் செய்தனர். ஆனால், ரவி மோகன் கண்டிப்பாக ஓட்டுப் போட வருவார் என பதிலடி கொடுத்த அவரது ரசிகர்களின் நம்பிக்கையை தற்போது ரவி மோகன் காப்பாற்றியுள்ளார்.

ஓட்டுப்போட்ட ரவி மோகன்: தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. காக்கிநாடாவில் படப்பிடிப்பில் இருந்த விஷால் அங்கிருந்து கிளம்பி தனது வாக்கினை செலுத்தினார். வெயில் குறைந்ததும் நடிகர் சிம்பு வந்து தனது வாக்கினை செலுத்தினார். இந்நிலையில், திருப்பதியில் சாமி தரிசனத்தை முடித்து விட்டு அங்கே இருந்து டிராவல் செய்து வீட்டுக்கு வந்து பின்னர், தனது வாக்குச்சாவடிக்கு வந்து ரவிமோகன் ஓட்டுப்போட்டுள்ளார்.
நல்லதே நடக்கும்: புதிதாக விஜய் கட்சியை தொடங்கி தேர்தலில் களம் காண்கிறாரே அதுபற்றி உங்கள் கருத்து என்ன என ரவி மோகனிடம் கேட்கபட்ட போது, நல்லதே நடக்கும் எனக் கூறினார். அனைவரும் தவறாமல் வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும் வாக்களிப்பது நமது கடமை அதை தவறவிடக் கூடாது என்றும் நல்ல மாற்றம் வந்தால் நல்லது தான் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications