வெற்றிமாறனுடன் இணையும் ரவி மோகன்.. இயக்குநர் யார் தெரியுமா?.. செம ட்விஸ்ட்
சென்னை: கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். ஜெயம் படத்தில் அறிமுகமான அவர் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்திருந்தார். கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்த அந்தப் படத்தில் ரவியுடன் நித்யா மேனன், யோகி பாபு, வினய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பொங்கலை முன்னிட்டு வெளியான அந்தப் படம் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றது. இந்தச் சூழலில் ரவியின் புதிய படம் குறித்து தெரியவந்திருக்கிறது.
சினிமா பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்த ரவி ஜெயம் படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் தெலுங்கு ரீமேக்காக இருந்தாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக அவர் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தொடர்ந்து ஹிட்டுகளை கொடுத்துவந்த அவர் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக வலம் வர ஆரம்பித்தார். அழகு மட்டுமின்றி திறமையும் உள்ளவர் என்ற பெயரையும் பெற்றார்.

விவாகரத்து: ரவியை பொறுத்தவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தவர். தான் உண்டு தனது வேலை உண்டு குடும்பம் உண்டு என்ற எண்ணத்தில் உள்ளவர். சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் தானும் தனது மனைவி ஆர்த்தியும் பிரிவதாக அறிவித்தார். ஆனால் ரவியின் இந்த முடிவு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஆர்த்தி முதலில் கூறினார். ஆனால் ரவியின் உறுதியான நிலைப்பாட்டால் விவாகரத்துக்கு ஆர்த்தியும் ஒத்துழைத்தார்.
நீதிமன்றத்தில்: இதனையடுத்து விவாகரத்து மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு பேருமே ஆஜராகினர். பிறகு அவர்களை நீதிபதி சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி வைத்தார். அங்கும் அவர்கள் சமரசம் அடையவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர்கள் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பது தெரியவந்தது. இச்சூழலில் சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அடுத்தக்கட்ட விசாரணையை பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தள்ளி வைத்தார்.
காதலிக்க நேரமில்லை: இது ஒருபக்கம் இருக்க ரவி மோகன் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்தார். அந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி ஓரளவுக்கு நல்ல வரவேற்பையே பெற்றது. வழக்கமான கதைதான் என்றாலும் படத்தில் மேக்கிங் தரமாக இருந்ததாக ரசிகர்கள் கூறினார்கள்.
அடுத்த படம்: அடுத்ததாக ரவியின் நடிப்பில் ஜீனி படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் ரவி நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றி தெரியவந்திருக்கிறது. அதாவது வெற்றிமாறன் எழுதியிருக்கும் கதையில் ரவி மோகன் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அந்தப் படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார். தற்போது கதை விவாதம் நடந்துவருவதாக கௌதம் தெரிவித்திருக்கிறார். அநேகமாக கௌதம் இயக்கிவரும் டாமினிக் படத்தை முடித்துவிட்டு இந்தப் படத்தின் ஷூட்டிங்கை தொடங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











