Karathey Babu Teaser: புலி வந்துடுச்சு.. பராசக்தியை விட பக்கா.. ரவி மோகனின் கராத்தே பாபு டீசர்!
சென்னை: கவினை வைத்து டாடா படத்தை எடுத்து ஹிட் கொடுத்த இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்துள்ள 'கராத்தே பாபு' படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. வரும் கோடை விடுமுறைக்கு யாரு வந்தாலும் பரவாயில்லை, புலி வருதுன்னு டீசரை படக்குழு இறக்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான ரவி மோகனின் காதலிக்க நேரமில்லை படம் பாராட்டுக்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபீஸில் பந்தயம் அடிக்கவில்லை. இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான பராசக்தி படத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ரவி மோகன் நடித்திருந்தார்.

அவரது நடிப்பு தான் படத்தில் சிறப்பாக இருந்தது என பலரும் பாராட்டி வந்த நிலையில், அதைவிட கராத்தே பாபு படத்தின் டீசரிலேயே ரவி மோகன் கம்பேக் கொடுக்கப் போகிறார் என ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
மனைவியை பிரிந்த ரவி மோகன்: ஆர்த்தி ரவியை திருமணம் செய்து 2 மகன்களை பெற்றெடுத்த நிலையில், ரவி மோகன் பல வருடங்களுக்குப் பிறகு தனது மனைவியை பிரிந்து விட்டார். மேலும், பாடகி கெனிஷாவுடன் நெருங்கி பழகி வரும் ரவி மோகன், தனியாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். யோகி பாபுவை வைத்து படம் ஒன்றையும் இயக்கி வரும் ரவி மோகன் கடந்த சில ஆண்டுகளாக சோலோவாக ஒரு வெற்றிப் படத்தைக் கூட கொடுக்கவில்லை என அவரது ரசிகர்கள் கடும் அப்செட்டில் இருந்த நிலையில், இந்த ஆண்டு கண்டிப்பாக ரவி மோகன் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கராத்தே பாபு டீசர்: கவினுக்கு சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது டாடா திரைப்படம் தான். அந்தளவுக்கு இன்னொரு வெற்றி தனக்கு கிடைக்கவில்லையே என அவரே காத்துக் கொண்டிருக்கிறார். டாடா படத்திற்கு பிறகு கராத்தே பாபு மூலம் மீண்டும் ஒரு வெற்றிப் படத்தை இயக்குநர் கணேஷ் கே. பாபு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவி மோகன், நாசர், கே.எஸ். ரவிக்குமார், தவுதி ஜவால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரசியல் வசனங்கள் பரபரக்கும் டீசரில் ரவி மோகனின் அழுத்தமான நடிப்பு மிரட்டுகிறது. ஆர்.கே. நகர் தொகுதியில் நடந்த தேர்தலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் டீசர் வெளியாகும் முன்னதாக அனைத்தும் கற்பனையே என்கிற தற்காப்பு போர்டை மாட்டிக் கொண்டு வருகிறது. கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











