ரவி மோகன் ஒரு முடிவுலதான் இருக்காருபோல.. இன்ஸ்டாகிராம்ல என்ன சொல்லிருக்காரு பாருங்க?
சென்னை: தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு கெனிஷாவுடன் ரவி மோகன் வந்ததுத திரைத்துறையில் பேசுப்பொருளாக மாறியது. விவாகரத்து வாங்குவதற்கு முன்னரே அவர் எப்படி வரலாம் என்று ஒருதரப்பினரும், விவாகரத்து முடிவில் ரவி உறுதியாக இருக்கும்போது தனக்கு பிடித்த இன்னொரு பெண்ணுடன் வருவதில் என்ன தவறு என்று மறுதரப்பினரும் தொடர்ந்து கூறினார்கள். இந்நிலையில் ரவியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்ட ரவி மோகன் அவரை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார். தான் ஏன் இந்த முடிவு எடுத்தேன் என்பது குறித்து அந்த சமயத்தில் அளித்த பேட்டிகளில் பேசியிருந்த ரவி, 'வீட்டில் வேலைக்காரர்களுக்கு கிடைக்கும் மரியாதைகூட தனக்கு கிடைக்கவில்லை. வீட்டை விட்டு வெளியேறியபோது தன்னிடம் கார்கூட இல்லை' என்று காரணங்களை அடுக்கினார்.
ஆர்த்தியின் விளக்கம்: ஆனால் ஆர்த்தி அளித்த விளக்கத்திலோ, 'தன்னிடம் எதுவும் கேட்கப்படாமலேயே இந்த முடிவை ரவி எடுத்திருக்கிறார். எனக்கு அது அதிர்ச்சியாக இருக்கிறது. அவரிடம் பேசுவதற்கு எவ்வளவோ முறை முயன்றேன். ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை' என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டுமென்று கூறி நீதிமன்றத்துக்கு சென்றார் ரவி மோகன். இப்போது அவர்களது விவாகரத்து வழக்கு நடந்துவருகிறது.

கெனிஷா ஜோடி: இதற்கிடையே கெனிஷாவுடன் தொடர்புப்படுத்தி பேசியதற்கு காட்டமான ரியாக்ஷனும் கொடுத்திருந்தார் ரவி. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக வந்தார். திருமணம், ரிசப்ஷன் என இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் ஒன்றாக வந்தார்கள். அதனையடுத்து ஆர்த்தியோ எமோஷனலாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
நடிகைகள் ஆதரவு: அந்த அறிக்கையில், 'குழந்தைகளுக்காக ஒரு தாயாக மட்டுமே இப்போது குரல் எழுப்புகிறேன். நீதிமன்றம் முடிவு செய்யும்வரை நான் ஆர்த்தி ரவிதான். எனவே யாரும் என்னை இப்போதைக்கு ரவியின் முன்னாள் மனைவி என அடையாளப்படுத்த வேண்டாம்' என தெரிவித்திருந்தார். அவரது அந்த அறிக்கையை பார்த்த நடிகைகள் குஷ்பூ, ராதிகா உள்ளிட்டோர் ஆர்த்திக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள். ரசிகர்கள் மத்தியிலும் ஒரு பரிதாபம் தோன்றியிருந்தது.
அன்னையர் தினத்திலும் உருக்கம்: அந்தப் போஸ்ட் மட்டுமின்றி அன்னையர் தினத்தன்று தனது இன்ஸ்டாகிராமில் மற்றொரு பதிவை வெளியிட்டிருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்களும் உண்மையில் ஆர்த்தி பாவம்தான் என்று கமெண்ட்ஸ் செய்தார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் அண்மையில் அவர்களது விவாகரத்து மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ரவி தனக்கு மாதா மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அது சர்ச்சையைத்தான் ஏற்படுத்தியது.
ரவியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்: ரவியோ விவாகரத்து என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்துடன், 'It's all about smiling in the end' என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ எவ்வளவு நடந்தாலும் ரவி கூலாக இருக்கிறாரே ப்பா என்று கமெண்ட்ஸ் செய்து அந்தப் போஸ்ட்டினை ட்ரெண்டாக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











