ஹீரோ .. ஹீரோ ..

By Staff

நடிகர் விஜய்யைத் தொடர்ந்து, ஜெயம் ரவியும் ரீமேக் ராஜா ஆகிக் கொண்டிருக்கிறார்.

தமிழில் நடிகர் பாலாஜி ஒரு பிரபல தயாரிப்பாளர். இவரது சுஜாதா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட அனைத்துபடங்களும் ரீமேக் படங்கள் தான். வேற்று மொழிகளில் ஹிட்டான படங்களின் ரைட்ஸ் வாங்கி அதை தமிழில் பிரபலஹீரோக்களை வைத்து எடுப்பார். பெரும்பாலான படங்கள் ஹிட்டானதால், தயாரிப்பு தொழிலை விட்டு விலகும் வரைவெற்றிகரமான தயாரிப்பாளராக விளங்கினார்.

கிட்டக்கட்ட இதே பாணியை நடிகர் விஜய் பின்பற்றத் தொடங்கினார். அக்கம் பக்கம் ஏதாவது படம் ஹிட்டாகிவிட்டால்உடனடியாக அதன் ரைட்ஸ் தனது தந்தையின் பெயரில் வாங்குவது அல்லது அதே டைரக்டரை தமிழில் இயக்க வைப்பது எனதெளிவாக இருந்தார்.

அப்படி விஜய் நடித்த ரீ-மேக் படங்கள் எல்லாமே பெரும் ஹிட்டாயின. கடைசியாக தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்டகில்லி, விஜய்யின் பல படங்களின் வசூல் ரெக்கார்டுகளை முறியடித்து இன்னும் கூட வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

விஜய் போட்ட இந்த ரீமேல் கோட்டில், ரோடு போட ஆரம்பித்திருக்கிறார் ஜெயம் ரவி. முழுக்க முழுக்க கதைகளிலும், டான்ஸ்,பைட்களிலும் கூட விஜய் பாணியையே பின்பற்றுகிறார் இவர்.

அவர் சதாவுடன் இணைந்து நடித்த ஜெயம், ஆஷினுடன் நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி ஆகிய இரண்டு படங்களும்தெலுங்கு ரீமேக் தான். இரண்டும் ஹிட். இவரது தந்தை தான் இவற்றை தெலுங்கிலும் எடுத்துவிட்டு தமிழில் எடுத்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

அடுத்தும் ஒரு ரீமேக் படம் செய்ய இருக்கிறார். ஆனால், ஒரு சின்ன வித்தியாசம். முதல் இரண்டு படங்களையும் தெலுங்கிலிருந்துஇறக்குமதி செய்தவர் இப்போது மலையாளத்திலிருந்து ஒரு கதையைப் பிடித்துள்ளார்.

மம்மூட்டி நடித்த பிளாக் படத்தை அண்மையில் ரவி தனது அப்பா மோகன், அண்ணன் ராஜாவுடன் பார்த்தார். மூன்று பேருக்கும்படம் ரொம்பவும் பிடித்துப்போக, இந்தப் படத்தையும் சொந்த பேனரிலேயே தமிழில் தயாரிக்க முடிவு செய்துவிட்டார்களாம்.

இந்தப் படத்தையும் அப்பா தயாரிப்பார், அண்ணன் இயக்குவார், தம்பி நடிப்பாார்.

இந்தப் படத்துக்கு முன்னதாக லட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாராகும் ராஸ்கல் என்ற படத்திலும் (பெயர் மாறவாய்ப்புள்ளது), பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தயாரிப்பில் ஒரு படத்திலும் ஜெயம் ரவி நடிக்கிறார்.

தனது மகன் எஸ்.பி.பி.சரண் கதாநாயகனாக நடித்துவரும் வேளையில், அவரை வைத்து படம் எடுக்காமல் ஜெயம் ரவியைவைத்து ஹீரோவாகப் போட்டுள்ளார் எஸ்.பி.பி.

ஓடுகிற குதிரை மீதுதானே பந்தயம் கட்ட முடியும் !


More from Filmibeat

Read more about: ravi tamil news tamilnadu thatstamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X