காம்னா- ரவியின் இதயத் திருடன் ஹேண்ட்சம் ஹீரோக்களில் ஒருவரான ஜெயம் ரவி காமெடிக்கு தாவுகிறார்.சரண் இயக்கத்தில் உருவாகும் இதயத்திருடனில் அவர் காமெடியில் கலக்கப் போகிறாராம்.ஒவ்வொரு படத்தையும் தேர்வு செய்து நடிப்பதில் ஜெயம் ரவிக்கு ஈடு இணை கோலிவுட்டில் யாரும் இல்லை. கதையும், தனதுகதாபாத்திரமும் பெர்பெக்டாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கும் இவர் அதற்காக வருடக்கணக்கில்காலத்தை வேஸ்ட் செய்யவும் தயாராக இருக்கிறார்.நல்ல கதையுள்ள படங்களில் நடித்ததால் தான் கடும் போட்டிக்கு இடையிலும் முதல் படமான ஜெயமும், இரண்டாவது படமானஎம்.குமரனும் சூப்பர் ஹிட்டானதாக நம்புகிறார்.முதல் இரண்டு படங்களையும் அப்பா மோகன் தயாரிக்க, அண்ணன் இயக்கத்தில் நடித்தவர் இப்போதுதான் முதன் முதலாகவெளிப் படத்தில் நடித்தார் தாஸ் என்ற அந்தப் படத்தில் இவருக்கு ஜோடி கேரளத்தைச் சேர்ந்த ரேணுகா மேனன் என்பதுஉங்களுக்குத் தெரியும். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. பாபு யோகீஸ்வரன் இயக்கிய இந்தப் படம் இம் மாதம்திரைக்கு வருகிறது.இதைத் தொடர்ந்து ரவி நடிக்கும் அடுத்த இதயத்திருடன். இந்தப் படத்தை சரண் இயக்குகிறார். இதில் ராம்ஜேத்மலானியின்பேத்தியான காம்னா தான் ரவிக்கு ஜோடி.படத்தின் பெயர் ரொமாண்டிக்காக இருந்தாலும், நகைச்சுவைக்கே முக்கியத்துவம் தந்து எடுக்கப் போகிறாராம் சரன். முதல்இரண்டு படங்களிலும் ஆக்ஷன், பாட்டு பாடும் ஹீரோவாக வலம் வந்த ரவி, இதில் முதன் முதலாக காமெடி ரோலில் நடிக்கப்போகிறார்.தமிழில் காமெடியில் ஜெயித்த ஹீரோக்கள் ரொம்பக் கம்மி. இந் நிலையில் இந்த ரிஸ்க் தேவையா என்று ரவியிடம் கேட்டால்,இதயத்திருடனும் எனக்கு ஏற்ற மாதிரி ஒரு ரொமாண்டிக் படம் தான். நகைச்சுவைக்கு கொஞ்சம் கூடுதலாக இருப்பப் போகிறது.எனது கேரக்டர் காமெடியை மையமாக வைத்தே நகரும் வகையில் சரண் அமைத்திருக்கிறார். சென்டிமென்ட் காட்சிகளிலோஅல்லது காதல் காட்சிகளிலோ நடிப்பது மிகவும் சுலபம். ஆனால் காமெடியில் நடிப்பது தான் மிகவும் சிரமம் என்பதை நான்உணர்வேன்.இந்தப் படத்தில் என்னுடைய திறமை முழுவதையும் பயன்படுத்தி நடிக்கப் போகிறேன். நிச்சயம் காமெடியிலும் ஜெயிப்பேன்என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார்.காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் இதயத்திருடனில் வசனம் எழுதும் பொறுப்பு கமலின் ஆஸ்தானவசனகர்த்தா கிரேஸி மோகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கிரேசி மோகனுடன் சமீபத்தில் வசூல்ராஜாவில் பணியாற்றிய சரணுக்கு, அவரது டைமிங் சென்சும், திறமையும் ரொம்பவேபிடித்துப் போய்விட்டதாம்.

By Staff

ஹேண்ட்சம் ஹீரோக்களில் ஒருவரான ஜெயம் ரவி காமெடிக்கு தாவுகிறார்.

சரண் இயக்கத்தில் உருவாகும் இதயத்திருடனில் அவர் காமெடியில் கலக்கப் போகிறாராம்.

ஒவ்வொரு படத்தையும் தேர்வு செய்து நடிப்பதில் ஜெயம் ரவிக்கு ஈடு இணை கோலிவுட்டில் யாரும் இல்லை. கதையும், தனதுகதாபாத்திரமும் பெர்பெக்டாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கும் இவர் அதற்காக வருடக்கணக்கில்காலத்தை வேஸ்ட் செய்யவும் தயாராக இருக்கிறார்.

நல்ல கதையுள்ள படங்களில் நடித்ததால் தான் கடும் போட்டிக்கு இடையிலும் முதல் படமான ஜெயமும், இரண்டாவது படமானஎம்.குமரனும் சூப்பர் ஹிட்டானதாக நம்புகிறார்.

முதல் இரண்டு படங்களையும் அப்பா மோகன் தயாரிக்க, அண்ணன் இயக்கத்தில் நடித்தவர் இப்போதுதான் முதன் முதலாகவெளிப் படத்தில் நடித்தார் தாஸ் என்ற அந்தப் படத்தில் இவருக்கு ஜோடி கேரளத்தைச் சேர்ந்த ரேணுகா மேனன் என்பதுஉங்களுக்குத் தெரியும். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. பாபு யோகீஸ்வரன் இயக்கிய இந்தப் படம் இம் மாதம்திரைக்கு வருகிறது.

இதைத் தொடர்ந்து ரவி நடிக்கும் அடுத்த இதயத்திருடன். இந்தப் படத்தை சரண் இயக்குகிறார். இதில் ராம்ஜேத்மலானியின்பேத்தியான காம்னா தான் ரவிக்கு ஜோடி.

படத்தின் பெயர் ரொமாண்டிக்காக இருந்தாலும், நகைச்சுவைக்கே முக்கியத்துவம் தந்து எடுக்கப் போகிறாராம் சரன். முதல்இரண்டு படங்களிலும் ஆக்ஷன், பாட்டு பாடும் ஹீரோவாக வலம் வந்த ரவி, இதில் முதன் முதலாக காமெடி ரோலில் நடிக்கப்போகிறார்.

தமிழில் காமெடியில் ஜெயித்த ஹீரோக்கள் ரொம்பக் கம்மி. இந் நிலையில் இந்த ரிஸ்க் தேவையா என்று ரவியிடம் கேட்டால்,

இதயத்திருடனும் எனக்கு ஏற்ற மாதிரி ஒரு ரொமாண்டிக் படம் தான். நகைச்சுவைக்கு கொஞ்சம் கூடுதலாக இருப்பப் போகிறது.

எனது கேரக்டர் காமெடியை மையமாக வைத்தே நகரும் வகையில் சரண் அமைத்திருக்கிறார். சென்டிமென்ட் காட்சிகளிலோஅல்லது காதல் காட்சிகளிலோ நடிப்பது மிகவும் சுலபம். ஆனால் காமெடியில் நடிப்பது தான் மிகவும் சிரமம் என்பதை நான்உணர்வேன்.

இந்தப் படத்தில் என்னுடைய திறமை முழுவதையும் பயன்படுத்தி நடிக்கப் போகிறேன். நிச்சயம் காமெடியிலும் ஜெயிப்பேன்என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார்.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் இதயத்திருடனில் வசனம் எழுதும் பொறுப்பு கமலின் ஆஸ்தானவசனகர்த்தா கிரேஸி மோகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிரேசி மோகனுடன் சமீபத்தில் வசூல்ராஜாவில் பணியாற்றிய சரணுக்கு, அவரது டைமிங் சென்சும், திறமையும் ரொம்பவேபிடித்துப் போய்விட்டதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X