என்னை தோற்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே.. அட இது நம்ம தளபதிக்கும் சூப்பரா செட் ஆகுதுல்ல!

சென்னை: தளபதிக்கு நிகர் தளபதியே.. என்கிற கேப்ஷனோடு வெளியாகி உள்ள இந்த தாறுமாறு பிறந்தநாள் ஸ்பெஷல் காமன் டிபி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வரும் ஜூன் 22ம் தேதி தளபதி ரசிகர்களின் திருவிழா என்று தான் சொல்ல வேண்டும்.

தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிருஸ்துமஸ் என தளபதி ரசிகர்களுக்கு எல்லாமே நடிகர் விஜய்யின் பிறந்தநாள் தான்.

எப்பவுமே யூத் தான்

எப்பவுமே யூத் தான்

வரும் ஜூன் 22ம் தேதி உடன் நடிகர் விஜய்க்கு 47 வயதாகிறது. வயசுதான் 47 ஆள் எப்பவும் பக்கா யூத் தான். இந்த வயதிலும் தளபதி போடும் வெறித்தனமான நடனத்திற்கு முன்பு டீனேஜ் பசங்க கூட பக்கம் வந்து நிற்க முடியாது. செய்கை அந்த அளவுக்கு தரமாக இருக்கும்.

குட்டீஸ்களின் க்யூட் கிங்

குட்டீஸ்களின் க்யூட் கிங்

மாஸ் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி எதிரிகளை பந்தாடினாலும், குழந்தைகளை எப்போதுமே ஆட்டம் போட வைப்பதிலும், ரசிக்க வைப்பதிலும் அண்ணே கில்லி தான். மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடாத வாண்டுகளே இல்லை என்று சொல்லலாம்.

தெறிக்கும் டிபிக்கள்

தெறிக்கும் டிபிக்கள்

47வது பிறந்தநாளை முன்னிட்டு 47 காமன் டிபிக்கள் வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அதற்கு மேலும் தளபதி பிளட்ஸ் பிறந்தநாள் டிபிக்கள் மற்றும் மாஷ் அப்களை இந்த லாக்டவுன் நேரத்தை பயன்படுத்தி சும்மா வளைத்து வளைத்து அடித்து நொறுக்கி வருகின்றனர்.

தளபதிக்கு நிகர் தளபதியே

தளபதிக்கு நிகர் தளபதியே

இந்நிலையில், லேட்டஸ்ட்டாக வெளியாகி உள்ள இந்த வித்தியாசமான காமன் டிபி ரசிகர்களின் உடனடி ஃபேவரைட்டாக மாறி உள்ளது. 'பிகில்' மைக்கேல் ராயப்பன் உடன் 'மெர்சல்' வெற்றிமாறன் பலப்பரீட்சை செய்யும் அசத்தல் போட்டி காட்சியை ஏகப்பட்ட விஜய்க்கள் ஆடியன்ஸாக மாறி பார்க்கும் காமன் டிபி ரசனையின் உச்சம்.

ரத்னகுமார் ட்வீட்

ரத்னகுமார் ட்வீட்

ஆடை படத்தின் இயக்குநரும் மாஸ்டர் படத்தின் வசனகர்த்தாவுமான ரத்னகுமார் இந்த காமன் டிபியை தனது ட்விட்டர் புரொபைல் பிக்சராகவே மாற்றி உள்ளார். மேலும், ஏகப்பட்ட காமன் டிபிக்கள் #June22 என்ற ஹாஷ்டேக்கில் டிரெண்டாகி வருகிறது.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X