மூன்று தலைமுறை ஹீரோ... ரஜினியை தலைவராக தமிழ் சினிமா கொண்டாட முக்கிய காரணங்கள்

சென்னை : இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர்களில் ஒன்று ரஜினிகாந்த். துடிப்பான நடை, பட்டையை கிளப்பும் மாஸ் டயலாக், ஸ்டைல் என பெயர் சொன்னாலே ரசிகர்களை உற்சாகமாக கொண்டாட வைப்பவர் ரஜினி.

Recommended Video

Superstar Rajini Birthday Special | Best of Thalaivar Styles, Punch, comedies | Filmibeat Tamil

ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவே தலைவர் என கொண்டாடும் ரஜினிகாந்த் இன்று தனது 71 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரஜினியை அனைவரும் தலைவர் என கொண்டாடடுவதற்கு முக்கியமான சில காரணங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

மூன்று தலைமுறை ஹீரோ

மூன்று தலைமுறை ஹீரோ

சிவாஜி, முத்துராமன் ஆகியோர் ஹீரோக்களாக நடித்த காலத்திலும் ரஜினி ஹீரோவாக நடித்தார். பிறகு அவர்களின் மகன்களான பிரபு, கார்த்திக் ஆகியோர் ஹீரோவாக நடித்த காலத்திலும் ரஜினி ஹீரோவாக நடித்தார். தற்போது மூன்றாம் தலைமுறையை சேர்ந்த கெளதம் கார்த்திக், விக்ரம் பிரபு ஆகியோர் ஹீரோக்களாக நடிக்க வந்த பிறகும் ரஜினி டாப் ஹீரோவாக நடித்து வருகிறார்.

எல்லா கேரக்டரும் ஹிட்

எல்லா கேரக்டரும் ஹிட்

ஆரம்பத்தில் நெகட்டிவ் ரோல்களில் நடித்து வந்த ரஜினி, 1980 கள் முதல் ஹீரோவாக நடிக்க துவங்கினார். பில்லா, தீ, பொல்லாதவன், முத்து, பாட்ஷா வரிசையாக நடித்த அனைத்து படங்களும் செம ஹிட் ஆகின. தில்லு முல்லு படத்தில் காமெடி ரோலில் நடித்தும் ஹிட் கொடுத்தார், அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடிகர் ரஜினியாகவே நடித்தும் ஹிட் காடுத்தார். ஸ்டைல், பஞ்ச் டையலாக் ஏதும் இல்லாமல் ஜானி, முள்ளும் மலரும் படங்கள் ஹிட் ஆகின. வித்தியாசமான நடிப்பு ஸ்டையிலால் அனைவரையும் கவர்ந்தார் ரஜினி.

ஒரே இந்திய நடிகர்

ஒரே இந்திய நடிகர்

உலக சினிமாவின் நான்கு முக்கிய படப்பிடிப்பு முறைகளிலும் நடித்த ஒரே இந்திய நடிகர் ரஜினி தான். பிளாக் அன்ட் ஒயிட், கலர், 3டி மற்றும் மோஷன் கேப்சர் தொழில்நுட்பங்களில் ரஜினி நடித்துள்ளார். அபூர்வ ராகங்கள், அவர்கள், மூன்று முடிச்சு ஆகிய பிளாக் அன்ட் ஒயிட் படங்களில் நடித்துள்ளார். அதற்கு பிறகு ரஜினி நடித்த பெரும்பாலான ரஜினி படங்கள் கலரில் வந்தவை. 2014 ல் ரஜினி நடித்த கோச்சடையான் படம் மோஷன் கேப்சரில் எடுக்கப்பட்டது. 2.0 படத்தில் 3 டி டெக்னாஜியிலும் ரஜினி நடித்துள்ளார்.

ஒரே இந்திய நடிகர்

ஒரே இந்திய நடிகர்

உலக சினிமாவின் நான்கு முக்கிய படப்பிடிப்பு முறைகளிலும் நடித்த ஒரே இந்திய நடிகர் ரஜினி தான். பிளாக் அன்ட் ஒயிட், கலர், 3டி மற்றும் மோஷன் கேப்சர் தொழில்நுட்பங்களில் ரஜினி நடித்துள்ளார். அபூர்வ ராகங்கள், அவர்கள், மூன்று முடிச்சு ஆகிய பிளாக் அன்ட் ஒயிட் படங்களில் நடித்துள்ளார். அதற்கு பிறகு ரஜினி நடித்த பெரும்பாலான ரஜினி படங்கள் கலரில் வந்தவை. 2014 ல் ரஜினி நடித்த கோச்சடையான் படம் மோஷன் கேப்சரில் எடுக்கப்பட்டது. 2.0 படத்தில் 3 டி டெக்னாஜியிலும் ரஜினி நடித்துள்ளார்.

மல்டி ஸ்டார் படங்கள்

மல்டி ஸ்டார் படங்கள்

டாப் ஸ்டாராக இருந்த போதிலும் மற்ற ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடிக்க தயக்கம் காட்டாமல், தனது படங்களில் மற்ற நடிகர்களுக்கும் சம அளவு முக்கியத்துவமான கேரக்டர்களில் நடிக்க வைக்க கூடியவர் ரஜினி. தளபதி படத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடித்தார். சந்திரமுகி படத்தில் ஜோதிகா, பிரபு போன்றோருடன் இணைந்து நடித்தார். 2.0 படத்தில் அக்ஷய் குமார் பக்ஷி ராஜன் கேரக்டரில் நடித்தார்.

மொழிகளை கடந்த புகழ்

மொழிகளை கடந்த புகழ்

இந்தி, தெலுங்கு திரையுலகிலும் புகழ்பெற்ற நடிகராக இருப்பவர் ரஜினி. இந்தியில் Andhaa Kanoon, ChaalBaaz, Hum, தெலுங்கில் Ram Robert Rahim, Anthuleni Katha, ஆங்கிலத்தில் Bloodstone, கன்னடம், மலையாளத்தில் சில படங்கள் என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அனைத்து மொழி சினிமாவிலும் பிரபலமாக இருப்பவர் ரஜினி.

இளைஞர்களுடனும் கூட்டணி

இளைஞர்களுடனும் கூட்டணி

கே.பாலச்சந்தர், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற பெரிய டைரக்டர்கள் படங்களில் மட்டுமல்ல திறமையான இளம் டைரக்டர்களின் படங்களிலும் நடிக்க ஓகே சொல்லி வருகிறார் ரஜினி. பா.ரஞ்சித்துடன் கபாலி, காலா, கார்த்திக் சுப்பராஜுடன் பேட்ட, சிறுத்தை சிவாவுடன் அண்ணாத்த என இளம் தலைமுறை இயக்குனர்களுடன் இணைந்து, அவர்களுக்கு ஏற்றவாறு பணியாற்றி வருகிறார் ரஜினி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X