twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரையுலக பயணத்தை இப்பதான் ஆரம்பிச்சுருக்கேன்... 18 ஆண்டு திரைப்பயணம்... நன்றி சொன்ன ஜெயம் ரவி

    |

    சென்னை : ஜெயம் படத்தின் மூலம் தன்னுடைய திரையுலக பயணத்தை துவக்கினார் நடிகர் ஜெயம் ரவி.

    ஜெயம் ரவி, சதா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள அந்த படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி என்றே வழங்கப்படுகிறார்.

    தளபதி தரிசனம் கிடைக்காதா… பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வாசலில் காத்திருக்கும் ரசிகர்கள் !தளபதி தரிசனம் கிடைக்காதா… பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வாசலில் காத்திருக்கும் ரசிகர்கள் !

    இந்நிலையில் ஜெயம் படம் வெளிவந்து 18 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

    2003ல் வெளிவந்த ஜெயம்

    2003ல் வெளிவந்த ஜெயம்

    நடிகர் ஜெயம் ரவி, சதா, கோபிசந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2003 ஜூன் 21ல் வெளிவந்தது ஜெயம் படம். தெலுங்கில் எடுக்கப்பட்ட ஜெயம் படத்தின் ரீமேக்காக வெளிவந்த இந்த படம் ஜெயம் ரவியின் சகோதரர் ஜெயம் ராஜாவால் டைரக்ட் செய்யப்பட்டது. இருவருக்கும் இந்த படம் சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது.

    18 ஆண்டுகள் நிறைவு

    18 ஆண்டுகள் நிறைவு

    இந்த படத்தின்மூலம் தன்னை சிறப்பான நடிகராக நிலை நிறுத்திக் கொண்டார் நடிகர் ஜெயம் ரவி. இதையடுத்து திரும்பிப் பார்க்கக்கூட நேரம் இல்லாமல் அவரது திரைப்பயணம் தொடர்ந்து வருகிறது. இந்த திரைப்படம் வெளிவந்து தற்போது 18 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது.

    தயாரிப்பாளர்கள் விருப்பத்திற்குரிய நடிகர்

    தயாரிப்பாளர்கள் விருப்பத்திற்குரிய நடிகர்

    இந்த திரைப்பயணத்தில் தேர்ந்தெடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி, தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இவரது நடிப்பில் எம் குமரன் சன் ஆப் மகாலஷ்மி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியன், தனி ஒருவன், பேராண்மை உள்ளிட்ட படங்கள் இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத்தந்த படங்கள்.

    ஜெயம் ரவி பளீச்

    ஜெயம் ரவி பளீச்

    இந்நிலையில் தன்னுடைய 18 ஆண்டுகால பயணம் குறித்து பேசியுள்ள நடிகர் ஜெயம் ரவி, ரெக்கார்ட் எல்லாம் 18 ஆண்டுகள் ஆகியுள்ளதாக தெரிவிப்பதாகவும் ஆனால் தான் தற்போதுதான் தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பயணத்திற்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    டைரக்டருக்கு ஜெயம் ரவி நன்றி

    டைரக்டருக்கு ஜெயம் ரவி நன்றி

    இதனிடையே டிக் டிக் டிக் படத்தை இயக்கிய சக்தி சவுந்தரராஜன், இந்த திரைப்பயணத்தில் தானும் சிறிய அளவில் அங்கம் வகித்ததற்கு பெருமை படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜெயம்ரவியின் மகன் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு நன்றி தெரிவித்த ஜெயம் ரவி, மகன் ஆரவிற்கு இத்தகைய அனுபவத்தை கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Jayam Ravi thanked his 18 years of Cinema Journey
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X