டிராகனை ஓடவிட்ட ரெட் டிராகன்.. சிவகார்த்திகேயனின் அமரன் பட வசூலை முறியடிக்குமா குட் பேட் அக்லி?

சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் வெளியான அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் 130 கோடிக்கும் குறைவாகவே உலகளவில் வசூல் ஈட்டியதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. 37 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியான பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் 150 கோடி வசூலை ஈட்டி அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் வசூலையே ஓவர்டேக் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.

சூர்யாவை தொடர்ந்து அஜித் படத்தையும் பிரதீப் ரங்கநாதன் முந்திவிட்டார் என விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில், ரெட் டிராகன் அஜித் குமார் டிராகன் பிரதீப் ரங்கநாதனின் வசூலை 4 நாட்களிலேயே கடந்து அசால்ட்டு காட்டியுள்ளார்.

Red Dragon beats Dragon at Box Office Did Good Bad Ugly beat Sivakarthikeyan s Amaran at Box Office

அடுத்த இலக்கு சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் வசூல் தான் என அஜித் ரசிகர்கள் சோஷியல் மீடியா முழுவதும் ஏகப்பட்ட பதிவுகளை போட்டு வருகின்றனர். இந்த ஆண்டு இதுவரை வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் மாறியுள்ளது அஜித் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

குட் பேட் அக்லி 5 நாள் வசூல்: குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டிலேயே கடந்த 5 நாட்கள் விடுமுறையை சரியாக பயன்படுத்திக் கொண்டு வெளியான நிலையில், 100 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகளவில் இதுவரை அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் 170 கோடி வசூலை கடந்துள்ளதாக sacnilk இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது. விடாமுயற்சி திரைப்படம் சரியாக பொங்கலுக்கு வெளியாகி இருந்தால் அந்த படமும் 200 கோடி வரை வசூல் செய்திருக்கும் என்கின்றனர்.

அமைதி காக்கும் மைத்ரி: குட் பேட் அக்லி படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் 30.9 கோடி வசூல் ஈட்டியதாக அறிவித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதன் பின்னர் 5 நாட்கள் ஆகியும் இதுவரை வசூல் அறிவிப்பு குறித்த எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. பாக்ஸ் ஆபீஸ் டிராக்கரான ரமேஷ் பாலா தான் குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் 150 கோடிக்கும் அதிகமாக கடந்ததாக ட்வீட் போட்டுள்ளர். இன்று முதல் வேலை நாட்கள் என்பதால், டிக்கெட் புக்கிங் குறையத் தொடங்கியுள்ளன. இந்த வார இறுதிக்குள் குட் பேட் அக்லி திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை புக் மை ஷோவில் 2 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Red Dragon beats Dragon at Box Office Did Good Bad Ugly beat Sivakarthikeyan s Amaran at Box Office

அமரன் வசூலை முந்துமா?: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, சிம்ரன், பிரியா வாரியர், பிரசன்னா, சுனில், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படம் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி உலகளவில் அதிகபட்சமாக 333 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக Sacnilk இணையதளம் தெரிவித்துள்ளது. அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் இந்த வார இறுதியிலும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் இதே வேகத்தில் ஓடினால் நிச்சயம் அமரன் படத்தின் வசூலை முறியடிக்கும் என்கின்ற்னர். ஆனால், பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கணிப்பின் படி ஒட்டுமொத்தமாக 250 கோடி வரை குட் பேட் அக்லி அதிகபட்சமாக கலெக்ட் செய்யும் என்றும் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X