அழகான சின்ன தேவதை.. ரெடின் கிங்ஸ்லி மகளை பாத்தீங்களா? என்ன அழகுடா சாமி!

சென்னை: ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த மார்ச் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் தனது மகளுடன் கிறிஸ்துமசை கொண்டாடி உள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி, நடிகர் மட்டுமில்லாமல் சொந்தமாக பொருட்காட்சிகளை நடத்தி வருகிறார். நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால், டான்ஸ் கற்றுக்கொண்ட இவர், 'அவள் வருவாளா' படத்தில் க்ரூப் டான்சர்களில் ஒருவராக நடனமாடினார். அந்த படத்தைத்தை தொடர்ந்து பல ஆண்டுகளாக திரைக்கு பின் இருந்த ரெடின் கிங்ஸ்லிக்கு நல்ல ஒரு ரோலை கொடுத்தது நெல்சன் தான்.

கோலமாவு கோகிலா: கோலமாவு கோகிலா படத்தில் நல்ல ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் கவனிக்கப்பட்டது. இதைத்தொடந்து எல்.கே.ஜி, குர்கா, சந்தானத்தின் ஏ1, ஜாக்பாட், நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் ரெடின் கிங்ஸ்லி நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் இவரை உச்சாணிக்கொம்பில் ஏற்றிவிட்டது. அந்த படத்தை தொடர்ந்து, விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், நாய் சேகர் ரிடர்ன்ஸ், டிடி ரிட்டர்ன்ஸ் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

Redin kingsley daughter photo
Photo Credit:

காதல் திருமணம்: படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த ரெடின் கிங்ஸ்லி, தனது நீண்ட நாள் காதலியான சங்கீதாவை 2023ம் ஆண்டு பெங்களூர் கோவிலில் நெருங்கி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டார். ரெடின் கிங்ஸிலியின் மனைவி சங்கீதா, அரண்மனைக்கிளி, திருமகள், ஆனந்த ராகம், எங்க வீட்டு மீனாக்க்ஷி ஆகிய சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் வெள்ளித்திரையிலும், வீட்டுல விசேஷம், விசித்திரன், ஹே சினாமிகா, சுல்தான், பாரிஸ் ஜெயராஜ், கபடதாரி, மாஸ்டர் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

குட்டி தேவதை: நடிகர் ரெடின் கிங்ஸ்லி சங்கீதா தம்பதிக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. ரெடின் கிங்ஸ்லி தனது மகளை கையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் அழகிய போட்டோ வெளியிட்டு இருந்தார். தற்போது ரெடின் கிங்ஸ்லி தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடி உள்ளார். அந்த போட்டோவை சங்கீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரெடின் கிங்ஸ்லியின் மகளை பார்த்த ரசிகர்கள் அனைவரும் குட்டி எஞ்சல் என்றும் அழகு குட்டி பாபா என இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X