»   »  அஜீத்தை வைத்து 5 படம்!ரிலையன்ஸ் மெகா பிளான்!!

அஜீத்தை வைத்து 5 படம்!ரிலையன்ஸ் மெகா பிளான்!!

Subscribe to Oneindia Tamil

அஜீத்தை வைத்து 5 புதிய படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். இதற்காக அவருக்கு ரூ. 30 கோடி சம்பளம்பேசப்பட்டுள்ளதாம்.

ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியில் படங்கள் தயாரித்து வெளியிட்டு வருகிறது. இப்போது தமிழிலும் கால் பதிக்க கிளம்பியுள்ளது. தமிழில் ஹாட்ஸ்டார்களை வைத்து படம் எடுத்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ்.

இதற்காக அவர்கள் முதலில் விஜய்யை அணுகியுள்ளனர். ஆனால் விஜய்தான் கால்ஷீட் கொடுக்க பல வருடம் காக்க வைப்பதில் எக்ஸ்பர்ட் ஆச்சே!வழக்கம் போல வாய் மூடி அமைதி காத்துள்ளார். இப்படியெல்லாம் காத்திருந்தால் சரிப்படாது என்று நினைத்த ரிலையன்ஸின் அல்டிமேட் ஸ்டாப்,அல்டிமேட் ஸ்டார் அஜீத்தாக இருந்தது.

தன்னைத் தேடி வந்த வாய்ப்பை கப்பென்றுப் பிடித்துக் கொண்ட அஜீத், ஆட்டத்துக்கு நான் ரெடி என்று கூறியுள்ளது. இதையடுத்து அஜீத்தைவைத்து 5 படங்களைத் தயாரிக்கப் போகிறது ரிலையன்ஸ்.

இதில் மொத்தமாக அஜீத்துக்கு ரூ. 30 கோடிக்கு சம்பளம் பேசியுள்ளனராம். அதாவது சராசரியாக ஒரு படத்துக்கு 6 கோடி. இது விஜய் வாங்கும்சம்பளத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் இரு படங்களைத் தயாரிக்கப் போகிறார்கள். அதைத் தொடர்ந்து மற்ற 3 படங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார்களாம்.

ஒவ்வொரு படத்துக்கும் ரூ. 30 முதல் 40 கோடி வரை பட்ஜெட் போட்டுள்ளனராம். மிகப் பெரிய பட்ஜெட் என்பதால்தான் அஜீத் உடனே ஒ.கே.சொல்லி விட்டாராம்.

படத்தின் இயக்குநர், பிற தொழில்நுட்பக் கலைஞர்கள், ஹீரோயின் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் அஜீத்தின் சம்மதமும் பெறப்படுமாம்.

தமிழ் சினிமாத் தயாரிப்புக்காக ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 500 கோடி முதலீட்டை கொட்டவுள்ளதாக கூறப்படுகிறது.

பணத்தைக் கொட்டுவதோடு நின்னுக்கோங்க, பாலிவுட் களேபர கலாச்சாரத்தையும் சேர்த்து கொட்டிட்டுப் போயிராதீங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil