விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி.. படப்பிடிப்புத் தளத்தில் மக்கள் செல்வனுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில்..

சென்னை: ஒரு வழியாக பிக்பாஸை முடித்துக் கொடுத்துவிட்டு, தீவிரமாக படப்பிடிப்புகளில் ஈடுபட்டு வருகிறார் விஜய் சேதுபதி. திரை உலகில் தினமும் அவர் குறித்த செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த மனிதனுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 24 மணி நேரமா இல்லை அதைவிட கூடுதலா என்று திரைத்துறையினரே ஆச்சரியப்படும் அளவுக்கு பறந்து பறந்து வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு படப்பிடிப்புத் தளத்தில் சண்டைக்காட்சி படமாக்கும்போது விபத்து ஏற்பட்டுவிட்டதாகும், இந்த விபத்தில் விஜய் சேதுபதிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

விபத்தைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் ஆபத்தான காயங்கள் எதுவும் இல்லை என்பதால் பயப்படத் தேவையில்லை என்றும், சில நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்களே அறிவுருத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. விபத்து தொடர்பான தகவல் விஜய் சேதுபதி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி இருந்தாலும், அவருக்கு அச்சமூட்டும் அளவுக்கு காயம் இல்லை என்ற தகவல் நிம்மதியைக் கொடுத்துள்ளது.

Report Vijay Sethupathi Met Accident At Shooting Spot During Fight Sequence - Health Update


விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள காந்தி டால்க்ஸ் என்ற படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் படத்தில் ஒரு டயலாக் கூட இல்லை என்பது தான். இது மட்டும் இல்லாமல் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் அரவிந்த் சாமி, அதிதி ராவ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். படம் உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அரசன்: அதேபோல் வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கும் அரசன் படத்தில் விஜய் சேதுபதி மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் கமிட் ஆகி உள்ளதாகவும், முன்னர் தகவல்கள் வெளியானது. அதன் பின்னர் படப்பிடிப்புத் தளத்தில் விஜய் சேதுபதி இருப்பது போலவும் புகைப்படங்கள் வெளியானது. விஜய் சேதுபதியிடம் தேதிகள் இல்லாததால் அவர் படத்தில் இருந்து வெளியேறுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனாலும் படக்குழு இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

விருதுகள்: நேற்று அதாவது ஜனவரி 29ஆம் தேதி தமிழ்நாடு அரசு மாநில விருதுகளுக்கான பட்டியலை வெளியிட்டது. இதில் கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து 2022ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளுக்கான விருதுகளைப் பெறுபவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டது. அதில், விஜய் சேதுபதி மொத்தம் இரண்டு விருதுகளைப் பெறவுள்ளார். 2016ஆம் ஆண்டு வெளியான படமான, புரியாத புதிர் படத்திற்காக சிறந்த நடிகர் விருதும், 2021ஆம் ஆண்டு வெளியான கடைசி விவசாயி படத்தின் தயாரிப்பாளராக சிறந்த படம் இரண்டாம் பரிசு விருதையும் வாங்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X