Retro Box Office Prediction: ரெட்ரோ பட்ஜெட் இத்தனை கோடி தானா?.. முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்?
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் அதிக அளவு திரையரங்குகள் ரெட்ரோ படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான கங்குவா திரைப்படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய தோல்வி படமாக மாறிய நிலையில், குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள ரெட்ரோ திரைப்படம் முதல் வாரத்திலேயே லாபத்தை பார்த்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் நாள் வசூல் எப்படி இருக்கும் என்கிற கணிப்புகளை இங்கே காணலாம் வாங்க..
பல வருடமாக பெரிய வெற்றி இல்லை: சூர்யா நடித்த சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகின. அந்த படங்கள் மிகவும் சிறப்பாக இருந்தாலும் பாக்ஸ் ஆபிஸ் கணக்கில் பல வருடங்களாக நடிகர் சூர்யா நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்பது அவரது ரசிகர்களை வருத்தம் அடைய செய்துள்ளது. இந்த முறை அதனை சூர்யா முறியடித்து வசூல் நாயகனாக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கம் 2வுக்கு பிறகு: ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த வெளியான சிங்கம் 2 திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. அந்த படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான், மாசு என்கிற மாசிலாமணி, 24, சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே, காப்பான், எதற்கும் துணிந்தவன் மற்றும் கங்குவா உள்ளிட்ட படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தரவில்லை. ரெட்ரோ திரைப்படம் பல ஆண்டுகளாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர் சூர்யாவுக்கு சரியான கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்ரோ பட்ஜெட் எவ்வளவு?: சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சூர்யாவின் சம்பளம் இல்லாத நிலையில், இந்தப் படத்தின் மூலம் கண்டிப்பாக 2டி நிறுவனம் மிகப்பெரிய லாபத்தை அள்ளும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்?: இந்தியா மற்றும் ஓவர் சீஸ் என சூர்யாவின் ரெட்ரோ படத்துக்கு சிறப்பான ப்ரொமோஷன் செய்யப்பட்டுள்ள நிலையில், டிக்கெட் புக்கிங் சூடு பிடித்து வருகிறது. முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 12 முதல் 15 கோடி ரூபாய் வரை வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் 20 கோடி ரூபாய் அளவுக்கு முதல் நாள் வசூல் வர வாய்ப்புகள் அதிகம் என்றும் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, நானியின் ஹிட் 3ம் பாகம் உள்ளிட்ட படங்கள் போட்டி போடுவதால் வசூல் சற்றே குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றனர். பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துவிட்டால் முதல் வார முடிவிலேயே பட்ஜெட்டை விட அதிகளவு லாபம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











