‘அரசன்’ பட விவகாரம்.. முன்பணத்தை திருப்பி தராவிட்டால் சொத்து ஜப்தி... சிம்புவிற்கு கோர்ட் உத்தரவு!

அரசன் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Recommended Video

முன்பணத்தை திருப்பி தராவிட்டால் சொத்து ஜப்தி... சிம்புவிற்கு கோர்ட் உத்தரவு!- வீடியோ

சென்னை: அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் சிம்பு ரூ.85 லட்சத்தை திருப்பி கொடுக்காவிட்டால் அவரது சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேஸ்சன் மூவி மேக்கர்ஸ் என்ற சினிமா படத் தயாரிப்பு நிறுவனம், தொடர்ந்த வழக்கில், நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து 'அரசன்' படத்தை தயாரிக்க திட்டமிட்டதாகவும், இதற்காக அவருக்கு ரூ. 1 கோடி சம்பளம் பேசி, முன்பணமாக ரூ.50 லட்சத்தை கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி வழங்கியதாகவும் கூறியிருந்தது.

Return Rs.85 lakh or face action, HC tells Simbu

மேலும், தங்களுடன் செய்து ஒப்பந்தப்படி நடிகர் சிம்பு 'அரசன்' படத்தில் நடிக்க முன்வராமல் இழுத்தடித்ததாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதனால், தங்கள் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தர சட்டப்படி உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சிம்பு முன்பணத்தை திருப்பி தராவிட்டால், அவரது சொத்துகள் முடக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக சிம்புவின் பொருட்கள் ஜப்தி செய்யப்பமுடும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X