மங்காத்தா அஜித்துடன் மோதும் மச்சான்.. குடியரசு தின பாக்ஸ் ஆபீஸ் கிளாஷ்.. தெறி பேபி டவுட்டுதான்!
சென்னை: அஜித் குமாரின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமான 'மங்காத்தா' திரைப்படம் வரும் ஜனவரி 23ம் தேதி திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது. அதன் அறிவிப்பை சமீபத்தில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.
கில்லி, சச்சின், படையப்பா உள்ளிட்ட ரீ ரிலீஸ் படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டையை தியேட்டர் ஓனர்களுக்கு பெரிய நடிகர்களின் படங்கள் வராத நேரத்தில் வெளியாகி ஓரளவுக்கு நிம்மதியை கொடுத்து வருகின்றன. தமிழ் சினிமாவை போல மற்ற மாநிலங்களிலும் இந்த ரீ ரிலீஸ் கலாசாரத்தை கொண்டு வந்து கலெக்ஷன் பார்த்து வருகின்றனர்.

பொங்கல் பாக்ஸ் ஆபீஸ் கிளாஷ் ஓய்ந்து முடிந்த நிலையில், அடுத்த பெரிய கிளாஷ் என்று பார்த்தால் அது குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு வரும் ஜனவரி 23ம் தேதி வெளியாகும் படங்களுக்கு இடையேயான போட்டி தான்.
தெறி ரீ ரிலீஸ் டவுட்டு தான்: விஜய் ரசிகர்களே ஜன நாயகன் படம் எப்படியாவது வரும் ஜனவரி 23ம் தேதி வெளியாகி விடுமா என்பதை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், திடீரென கலைப்புலி எஸ். தாணு சந்தில் சிந்து பாடி விடலாம் என்பது போல தெறி ரீ ரிலீஸை பொங்கலுக்கு இறக்க பிளான் போட்டார். ஸ்டூடியோ க்ரீன் மற்றும் கண்ணன் ரவி க்ரூப்ஸ் கோரிக்கை வைத்த நிலையில், ஜனவரி 23ம் தேதி தெறி ரீ ரிலீஸ் ஆகும் என்று அறிவித்து நேற்று டிரைலரையும் வெளியிட்டார். ஆனால், அதன் பின்னர், திரெளபதி 2 பட இயக்குநர் மோகன் ஜி கேட்டுக் கொண்ட நிலையில், அதுகுறித்து யோசிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், தெறி ரீ ரிலீஸ் திரைப்படம் மீண்டும் போஸ்ட்போண்ட் ஆகும் என்றே தெரிகிறது.

மங்காத்தா அஜித்துடன் மோதும் மச்சான்: சூர்யாவின் கருப்பு படத்துடன் போட்டிப் போட தயார் என சொல்லிக் கொண்டு வந்த மோகன் ஜி பொங்கல் போட்டியிலேயே தனது படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், ஜனவரி 23ம் தேதிக்கு தள்ளிப்போனார். அஜித்தின் மங்காத்தா ரீ ரிலீஸ் படமும் ஜனவரி 23ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், திரெளபதி 2 ஹீரோ ரிச்சர்ட் ரிஷி தனது மச்சான் அஜித்துடன் மோத போகிறார்.
ஷாலினி தம்பி: ஷாலினி மற்றும் ஷாமிலியின் தம்பியும் அஜித் குமாரின் மச்சானுமான ரிச்சர்ட் ரிஷி நடித்த திரெளபதி படத்தின் 2ம் பாகம் முதல் பாகத்தை விட கூடுதல் பொருட்செலவில் ராஜா காலத்து கதையாக உருவாகியுள்ள நிலையில், திரெளபதி 2 திரைப்படத்துக்கு மங்காத்தா ரீ ரிலீஸ் படத்தால் சிக்கல் ஏற்படுமா? எந்த படம் அதிக வசூலை ஈட்டும் என்கிற விவாதங்கள் சோஷியல் மீடியாவில் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











