»   »  ராக்கி கட்டுவது என்றால் என்ன?: இந்த நடிகருக்கு குசும்பு தானே இது!

ராக்கி கட்டுவது என்றால் என்ன?: இந்த நடிகருக்கு குசும்பு தானே இது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி இன்று சகோதரிகள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டி வரும் நிலையில் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் ராக்கி கட்டுவதற்கு புது அர்த்தம் சொல்லிக் கொடுத்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் ட்விட்டரில் ரொம்பவே சுறுசுறுப்பாக உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹில்லாரி கிளிண்டன், அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி நடிகை கிம் கர்தாஷியன் என சகட்டு மேனிக்கு பலரையும் கிண்டல் செய்துள்ளார்.

Rishi Kapoor's latest joke is about Rakhee

கும்மென்று இருக்கும் கிம் தனது உடலை ஒட்டி டைட்டாக உடை அணிவதை பார்த்த ரிஷி கிம் ஒரு வெங்காய மூட்டை போன்று இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் ரக்ஷா பந்தன் பண்டிகை அன்று சகோதரிகள் தங்களின் சகோதரர்களுக்கு பாசத்துடன் கட்டும் ராக்கியையும் கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளார்.

இது குறித்து ரிஷி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ராக்கி கட்டுவதின் புகைப்படம். சகோதரிகளே என்ஜாய் என தெரிவித்துள்ளார்.

ராக்கி கயிறுக்கு பதில் பழம்பெரும் இந்தி நடிகை ராக்கியை ஒரு படத்தில் தூணில் கட்டிப்போட்டிருக்கும் காட்சியின் புகைப்படத்தை வெளியிட்டு சேட்டை செய்துள்ளார் ரிஷி.

English summary
Bollywood actor Rishi Kapoor has given a new explanation to tying rakhi on Raksha Bandhan festival.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil