அட நம்ம ரித்திகா சிங்கா இவங்க.. வெறித்தனமா ஒர்க் அவுட் செய்றாங்களே.. ட்ரெண்டாகும் வீடியோ
சென்னை: ரித்திகா சிங் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்தார். காலப்போக்கில் வாய்ப்புகள் குறைய ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் கடைசியாக துல்கர் சல்மான் நடித்த கிங் ஆஃப் கொத்தா படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். கடைசியாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்த அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்தவகையில் அவர் பகிர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் உருவான படம் இறுதிச்சுற்று. கடந்த 2016ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. இதில் ரித்திகா சிங் கதாநாய்கியாக நடித்தார். இதுதான் அவரது முதல் படம் ஆகும். அறிமுகமான படத்திலேயே தனது நடிப்பின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் ரித்திகா சிங். நிஜத்தில் குத்துச்சண்டை வீராங்கனையான் ரித்திகா சிங் இறுதிச்சுற்று திரைப்படத்திலும் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்தார்.
தேசிய விருது: இதனால் அந்தக் கதாபாத்திரமாக மாறுவது அவருக்கு வெகு இயல்பாகவே அமைந்துவிட்டது. குத்துச்சண்டை வீராங்கனையாக மட்டுமின்றி பாடல்களில் நடனமும் சிறப்பாக ஆடினார். இதனால் கோலிவுட்டில் மிகச்சிறந்த எதிர்காலம் ரித்திகாவுக்கு இருப்பதாக பலர் கூறினர். மேலும், இறுதிச்சுற்று படத்தில் ந்டித்ததற்காக முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார்.

கொலை: சினிமாவில் கண்டிப்பாக பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதற்கேற்ப அவருக்கான பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. கடைசியாக அவரது நடிப்பில் கொலை திரைப்படம் வெளியானது. அந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படி பெரிய வெற்றி பெறவில்லை. இதனையடுத்து கிங் ஆஃப் கொத்தா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடினார். அது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
வேட்டையன்: இனி கவர்ச்சி நடனத்திற்கு மட்டுமே அவர் அழைக்கப்படுவார் என்று பலரும் நினைத்திருந்த சூழலில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் முக்கியமான ரோலை ஏற்றிருந்த அவர்; தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இருப்பினும் அந்தப் படம் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றது. அப்படத்துக்கு பிறகு பெரிதாக தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் குவியவில்லை. இருப்பினும் சில படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவே கூறப்படுகிறது.
ஒர்க் அவுட் ஃபோட்டோ, வீடியோ: இப்படி சினிமாவில் தொடர்ந்து நடித்துவரும் அவர் தான் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதும் வாடிக்கையாக இருக்கிறது. சமயங்களில் அந்த புகைப்படங்களும், வீடியோக்களும் ஓவர் டோஸ் கவர்ச்சியாகவும் மாறிவிடுவதுண்டு. இந்நிலையில் ரித்திகா சிங் புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதாவது அவரது உடல் எடை திடீரென ஏறியிருக்கிறது. இதனை கவனித்த அவர் உடனடியாக அதனை குறைத்தே ஆக வேண்டும் என்ற முடிவில் கடுமையான ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்திருக்கிறார். அதுதொடர்பான வீடியோவை பகிர்ந்திருக்கும் அவர் கடந்த மூன்று மாதங்கள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. உடல் எடை கூடிவிட்டது, காலில் ஏற்பட்ட காயத்தால் வந்த வலியும் அதிகரித்தது. இதனால் ஒர்க் அவுட்டோ, நடனமோ செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











