»   »  நோட்டால் அடிக்கும் ரித்தீஷ்!

நோட்டால் அடிக்கும் ரித்தீஷ்!

Subscribe to Oneindia Tamil

தயாரிப்பாளர்கள் பணம் கொடுத்து நடிக்க வைப்பதுதான் வழக்கம். ஆனால் ஜே.கே.ரித்தீஷ் படு வித்தியாசமாக, தயாரிப்பாளருக்கு பணத்தை அள்ளிக் கொடுத்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்று அசத்தியுள்ளார்.

அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரன்தான் ரித்தீஷ். ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞர் அணியில் ஆர்கனைசராக இருக்கிறார். அதற்கு முன்பு ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுடன் படு நட்பாக இருந்தவர். இப்போது மு.க.ஸ்டாலினுடன் நல்ல நட்பில் இருப்பதாக கேள்வி.

இப்படியாக அரசியல் அரங்கில் அமர்க்களம் செய்து கொண்டிருநத் ரித்தீஷுக்கு திடீரென நடிப்பு தாகம் ஏற்பட்டது. தாகம் தணிக்க பணப் பொட்டியுன் சென்னைக்கு ஓடி வந்தார். காஸ்ட்லி தாகம் என்பதால் பணக் கட்டுக்களை அடுக்கி வைத்து என்னை வைத்து படம் தயாரிக்க வர்ரீங்களா என்று அனவுன்ஸ் செய்தார்.

ரித்தீஷின் ரிச்னஸைப் பார்த்து ஒரு தயாரிப்பாளர் முன்வந்தார். அவருக்கு பணக் கட்டுக்களை அள்ளிக் கொடுத்து அட்டகாசமாக என்னை வைத்துப் படம் எடுங்கள் என்றார். அந்தத் தயாரிப்பாளர் சின்னி ஜெயந்தை இயக்குநராகப் போட்டார். கானல் நீர் என்ற பெயரில் படத்தை எடுக்க முடிவானது.

ரித்தீஷின் பேக்கிரவுண்டைப் புரிந்து கொண்ட சின்னி ஜெயந்த், ஜில்பான்சியா இருக்காரே ரித்தீஷ், இவரை வைத்து குல்பான்சி செய்து விட வேண்டியதுதான் என்று முடிவு செய்து சின்ன கேரக்டரில் நடிக்கவிருந்த ரித்தீஷின் கேரக்டரை இம்ப்ரூவ் செய்து படத்தின் நாயகனாக்கி விட்டார்.

இப்படி உருமாற்றியதற்காக சின்னிக்கு ரூ. இரண்டரை கோடியை அள்ளிக் கொடுத்துள்ளார் ரித்தீஷ். ஒரு வழியாக படம் முடிந்து, ஆடியோ வெளியீட்டு விழா படு பிரமாண்டமாக நடந்தது அமைச்சர் தங்கவேலன்தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

போன மாதம் படம் வெளியானது. படம் ரிலீஸானபோது மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களுக்கு பணம், பிரியாணி கொடுத்து ஆட்களைத் திரட்டிக் கொண்டு வந்து பார்க்க வைத்தனர் ரித்தீஷின் ஆட்கள்.

ஆனால் படத்தில் திராணி இருந்தால்தானே அது ஓடும்! வெறும் பிரியாணியைக் காட்டினால் ஓடுமோ? கானல் நீரும் புட்டுக் கொண்டது. இருந்தாலும், தனது கலைத்தாகம் அடங்காத ரித்தீஷ் தொடர்ந்து நடித்து கலக்க முடிவு செய்தார்.

படிக்காதவன் படத்தில் ரஜினிக்குத் தம்பியாக நடித்த விஜய் பாபு நாயகன் என்ற பெயரில் புதிதாக ஒரு படத்தைத் தயாரிக்கிறார். அவரது மகன் ரமணாதான் இப்படத்தின் நாயகன். விஜய்பாபுவை அணுகிய ரித்தீஷ், உங்களது படத்தில் எனக்கு ஒரு கேரக்டர் கொடுங்கள் என்று கோரி ரூ. 85 லட்சம் பணத்தை எடுத்து நீட்டியுள்ளார்.

வியர்த்து விதிர்த்துப் போன விஜய் பாபு, கேரக்டர் கேட்கவே இவ்வளவு பணம் என்றால் படத்தை முடிப்பதற்குள் எவ்வளவு வருமோ என்று கணக்குப் போட்டு உடனடியாக ஒரு காவல்துறை அதிகாரி வேடத்தை ரித்தீஷுக்குக் கொடுத்து வளைத்துப் போட்டு விட்டாராம்.

எனவே, விரைவில் விஜய்பாபுவும் கோடீஸ்வரர் ஆகி விடுவார் என்கிறார்கள் கோலிவுட்டில்.

வழக்கமாக ஜோட்டால் அடிப்பார்கள், ஆனால் ரித்தீஷ் நோட்டால் அடிக்கிறார். இவர் கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil