'கருப்பு' எப்போ ரிலீஸ்.. தயாரிப்பாளர் மீது வழக்கா? ஆர்.ஜே.பாலாஜி அதிரடியான பதில்!
சென்னை: கருப்பு படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு இடையே ஏற்பட்டுள்ள சண்டை காரணமாகத்தான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகவில்லை என்ற தகவல் இணையத்தில் பரவி வரும் நிலையில், ஆர்.ஜே.பாலாஜி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் 45வது படமாக கருப்பு திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்கள் எதிர்பார்த்தபடி படம் வெளியாகாததால், படம் ஓடிடியில் விற்பனையாகவில்லை என்றும், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு இடையே ஏற்பட்டுள்ள சண்டை காரணமாகத்தான் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டதாக பலவிதமான தகவல்கள் பரவி வந்தன.

நானும் காத்திருக்கிறேன்: இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கிரிக்கெட் கமெண்ட்ரியை முடித்துவிட்டு வந்த என்னிடம் ரசிகர்கள் அன்பை பகிர்ந்து கொண்டனர். அதை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது, மீண்டும் கருப்பு திரைப்படத்தின் வேலையை தொடங்கி இருக்கிறேன். இதைக்கேட்டதும் சூர்யா சாரின் ரசிகர்கள் கடுப்பாவீங்க என்று எனக்கு தெரியும். ஏனென்றால் இந்த படத்திற்காக நீண்ட நாட்களாக அனைவரும் காத்து இருக்கிறார்கள். நானும் அப்படித்தான் இரண்டு வருடமாக காத்திருக்கிறேன். உங்களுடைய காத்திருப்பு நிச்சயமாக நல்ல பலனை தரும். இதற்கு மேல் நிறைய நேரத்தை எடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்குள் கருப்பு படம் எப்போது வெளியாகும் என அனைத்து அப்டேட்டுகளையும் நான் வெளியிடுகிறேன். ஆனால், கண்டிப்பாக ஏப்ரல் 10ந் தேதி படம் வெளிவராது. அதை நான் இப்பவே சொல்லி விடுகிறேன்.
எனக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டையா?: ஏப்ரல் 10ந் தேதி திரைப்படம் வெளியாகும், எனக்கும் எஸ்.ஆர்.பிரபுக்கும் சண்டை என்றும், அவர் மீது வழக்கு போடப்போகிறேன், தயாரிப்பாளருக்கும் இசையமைப்பாளருக்கும் சண்டை என பல தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது. எனக்கு தெரியும் நீங்கள் என் மீது கடுமையான ஆத்திரத்தில் இருக்கிறீர்கள் என்று. ஏனென்றால் இந்த படத்திற்காக நீங்கள் நீண்ட நாட்களாக காத்திருப்பதால், இந்த டிசப்பாய்மென்ட். அதை நான் மதிக்கிறேன். சீக்கிரமே கருப்பு படம் குறித்த அப்டேட்டை வெளியிடுகிறேன். படம் எப்போது வெளியாகும் என்ற தகவலுடன் 10 நாட்களில் நான் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். இந்த படம் நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும், குடும்பத்தில் இருக்கும் அனைவரும் இந்த படத்தை விரும்பி பார்ப்பீர்கள். இப்போது நான், அதிக நேரம் பேச விரும்பவில்லை. நிச்சயமாக ஒரு புதிய அப்டேட்டுடன் உங்களை சந்திக்கிறேன் என்று ஆர்.ஜே.பாலாஜி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











