நண்பர்களோட அதிகமா குடிச்சிருக்கேன்.. பிட்டு படம் பார்த்திருக்கேன்.. ஆனால் இப்போ?.. ஆர்ஜே பாலாஜி ஓபன்!

சென்னை: ஆபாச படம், அளவில்லாத சரக்கு, சிகரெட் புகை என அனைத்து கெட்டப் பழக்க வழக்கங்களையும் செய்திருக்கிறேன். ஆனால், இப்போ அதையெல்லாம் விட்டு விட்டேன் என நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கல்லூரி படிக்கும் போது சிகரெட் பிடித்தால் தான் நண்பர்களின் கேங்கில் சேர்த்துக் கொள்வார்கள் என சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன். சத்யம் தியேட்டர் வாசலுக்கு முன் நின்றுக் கொண்டு நண்பர்கள் கேங் உடன் சேர்ந்து புகை விட்டுக் கொண்டிருந்தேன்.

RJ Balaji opens up about how he shed his bad habits in a recent fans meet
Photo Credit:

அதெல்லாம் எனக்கு அப்போ கூலாக தெரிந்தது. ஆனால், ஒரு கட்டத்தில், இதெல்லாம் என்னையும் என் உடலையும் எந்தளவுக்கு கெடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து விட்டு விட்டேன் என ஆர்ஜே பாலாஜி இளைஞர்கள் முன்பாக பேசியுள்ளார்.

ஆபாச படம் பார்ப்பேன்: பிட்டு படங்களை பார்ப்பதெல்லாம் ஒரு வயதில் நல்லா இருக்கும். கெத்தாக தெரியும். ஆனால், அதெல்லாம் தேவையற்ற சிக்கல்களையும் மன அழுத்தத்தையும் தரும் என்பது அப்போது புரியாது. ஆனால், அதை புரிந்துக் கொண்ட பின்னர், அதையெல்லாம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் எனக் கூறியுள்ளார்.

20 வருஷத்துக்கு முன்னாடியே சிகரெட்: சென்னையில் உள்ள நியூ காலேஜில் தான் படித்தேன். அங்கே உள்ள நண்பர்களின் கேங்கில் சேர வேண்டும் என்றால் சிகரெட் பிடிக்க வேண்டும். அதற்காகவே சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன். அப்போ அந்த வயசுல அதெல்லாம் எனக்கு கூலாக தெரிந்தது. ஆனால், இப்போ கிட்னி போய்விடுமோ, லங்ஸ் கெட்டு விடுமோ என்கிற பயம் வருகிறது. நமக்காக இருப்பவர்களுக்காக நாம் இருக்க வேண்டும் என்கிற பயம் தான் இந்த கெட்ட பழக்கத்தையெல்லாம் விட வைத்தது என பேசியுள்ளார்.

பார்ட்டியில் சரக்கு அடிக்க மாட்டேன்னு சொன்னேன்: சமீபத்தில், ஒரு பார்ட்டி ஒன்றில் சரக்கு அடிக்க சொன்னதும், நோ சொல்லிட்டேன், என்னை பழம் மாதிரி பார்த்தாங்க.. ஆனால், நான் அவர்களிடம் பார்ட்டி முடிந்ததும் கெத்தாக கார் ஓட்டிக் கொண்டு வீட்டுக்கு போய்விடுவேன், நாளைக்கு எந்தவொரு தலைவலியும் இல்லாமல் என்னோட வேலையை செய்ய முடியும், உங்களால் முடியுமா என விஐபி தனுஷ் போல பஞ்ச் பேசிவிட்டுச் சென்றேன். இது நான் யாருக்கும் அட்வைஸ் பண்ணுவதாக நினைக்க வேண்டாம். இது என்னோட தனிப்பட்ட கருத்து, என் வாழ்க்கையில நான் அனுபவிச்சது அதை மட்டுமே சொல்கிறேன். நீங்க உங்களுடைய சொந்த அனுபவத்தை அனுபவிக்கலாம். நான் யாரையும் இனிமே குடிக்காதீங்க, பார்ன் பார்க்காதீங்க, சிகரெட் பிடிக்காதீங்கன்னு சொல்ல வரலை என்று பேசியுள்ளார்.

சூர்யா படம் ரெடி: கங்குவா படத்தை விட சூர்யாவுக்கு இந்த ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படம் நல்ல படமாக அமைந்தது. குறைவான பட்ஜெட்டில் நல்ல லாபத்தை சம்பாதிக்கும் ரூட்டில் தொடர்ந்து குறுகிய காலத்தில் படங்களை முடிக்கும் பணிகளில் சூர்யா ஈடுபட்டு வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயகக்த்தில் சூர்யா, த்ரிஷா நடித்துள்ள படம் ஷூட்டிங் முடித்து இந்த ஆண்டு ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படமும் 3 மாதத்தில் ரெடியாகி விடுமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X