கருப்பு படத்துக்கு ப்ரோமோஷனா.. விஜய்க்கு ப்ரோமோஷனா.. ஆர்.ஜே.பாலாஜி மீது சூர்யா ரசிகர்கள் வருத்தம்

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் கருப்பு திரைப்படம் மே 14ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. இதில் ஹீரோயினாக திரிஷா நடித்திருக்கிறார். படம் நாளை ரிலீஸாகவிருக்கும் நிலையில் ப்ரோமோஷன் பணிகள் எல்லாம் பயங்கரமாக சூடு பிடித்திருக்கின்றன. அதேசமயம் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தான் கலந்துகொள்ளும் ஒவ்வொரு ப்ரோமோஷனிலும் கருப்பை ப்ரோமோட் செய்கிறாரோ இல்லையோ தவறாமல் விஜய்யை செய்துவிடுகிறார்.

சூர்யா ஹீரோவாக நடிக்க ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கும் படம் கருப்பு. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். மிகப்பெரிய அளவில் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. முக்கியமாக சூர்யாவுக்கு ஒரு தரமான ஹிட் கிடைத்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டன. எனவே இந்தப் படம் இத்தனை வருட ஏக்கத்தை கண்டிப்பாக தீர்த்து வைக்கும் என்று ரசிகர்களும், சூர்யாவும் ரொம்பவே நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

RJ Balaji Promoting Karuppu Or Vijay Suriya Fans React To Viral Speech
Photo Credit:

நாளை படம் ரிலீஸ்: படமானது சில மாதங்களுக்கு முன்பே ரிலீஸாகியிருக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை. ஒருவழியாக மே 14ஆம் தேதி (நாளை) ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு; இப்போது ரிலீஸுக்கும் தயாராகியிருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் கடந்த சில வாரங்களாகவே சூடுபிடித்திருக்கின்றன. அந்தவகையில் நேற்று கேரளாவுக்கு சென்று படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் ஆர்.ஜே.பாலாஜி பேசியிருக்கும் விஷயம் வைரலாகியிருக்கிறது.

Also Read
சனாதனம் அழிச்சிடுச்சுனு சொன்ன சங்கீதாவின் கணவர் க்ரிஷ்.. இப்போ பொளக்குறாங்க.. யார் காப்பாத்துவாங்க?
சனாதனம் அழிச்சிடுச்சுனு சொன்ன சங்கீதாவின் கணவர் க்ரிஷ்.. இப்போ பொளக்குறாங்க.. யார் காப்பாத்துவாங்க?

ஆர்.ஜே.பாலாஜி பேச்சு: அவர் பேசுகையில், "தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. அனைத்துமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். சமீபத்தில்கூட எங்கள் மாநிலத்தில் பல அரசியல் கட்சிகளை சேர்ந்த பலர் முதலமச்சராக முயற்சி செய்தார்கள். உங்கள் ஊரில் ரே கட்சியை சேர்ந்த பலர் முதலமைச்சராக முயற்சித்தார்கள். எங்களுக்கு நல்ல முதலமைச்சர் கிடைத்துவிட்டார். உங்களுக்கும் விரைவில் நல்ல முதலமைச்சர் கிடைக்க வாழ்த்துகள். இதுதவிர்த்து இரண்டு மாநிலங்களிலும் இருக்கும் மற்றொரு ஒற்றுமை சூர்யா மீது நீங்கள் செலுத்தும் அன்பு" என்றார்.

என்ன பாலாஜி இதெல்லாம்?: ஆர்.ஜே.பாலாஜியின் இந்த பேச்சு விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை. சில நாட்களுக்கு முன்பு நடந்த ப்ரோமோஷனிலும், விஜய்யை ஓவராக புகழ்ந்திருந்த பாலாஜி; இப்போது கேரளாவிலும் அதையே செய்திருக்கிறார். இவர் கருப்பு படத்துக்கு ப்ரோமோஷன் செய்கிறாரா இல்லை விஜய்க்கு செய்கிறாரா என்று தெரியவில்லை; சூர்யாவை பற்றி எக்கச்சக்கமாக பேசுவார் என்று பார்த்தால் மேடைதோறும் விஜய் புகழ் பாடுகிறாரே என சூர்யா ரசிகர்கள் நொந்துகொள்கிறார்கள்.

முதலில் விஜய்தான்: முன்னதாக, கருப்பு படத்தின் கதையை முதலில் விஜய்யிடம்தான் பாலாஜி கூறினார். விஜய்யும் நடிப்பதற்கு ஓகே சொன்னாலும்; சில விஷயங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. அதனையடுத்து சூர்யாவுக்கு தகுந்த மாதிரி கதையை மாற்றி கருப்பு படத்தை எடுத்து முடித்திருக்கிறார். ஆகமொத்தம் கருப்பு பட ப்ரோமோஷனில் விஜய்யின் புகழ் அதிகமாக பாடப்பட்டதால்; பாலாஜி மீது சூர்யா ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறார்கள் என்பதுதான் சோஷியல் மீடியாவில் இருக்கும் எதார்த்தமான உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X