surya 45: பிரம்மாண்ட செட் அமைத்து கொண்டாட்டம்... சூர்யா - த்ரிஷா என்ன மாதிரியான காஸ்ட்யூம் தெரியுமா
சென்னை: கங்குவா படத்திற்கு பிறகு சூர்யா அடுத்த ஹிட் படத்திற்காக கடினமாக உழைத்து வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ரெட்ரோ படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகிறது. இதைத்தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி படத்தில் மிக தீவிரமாக நடித்து வருகிறார். இப்படத்தில் ஹிட் ஹீரோயின்கள் வேறு இருப்பதால், படப்பிடிப்பே திருவிழா போல் நடந்துகொண்டிருக்கிறதாம். சூர்யா 45 படத்தில் பாட்டு, ஆட்டம் என தூள் கிளப்ப பிரம்மாண்ட செட்டும் அமைப்பதாக தகவல் கசிந்திருக்கிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. இதுவரை தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், ரஜினி, கமல் படங்களுக்கு இல்லாத அளவிற்கு இப்படம் ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சுமாரான வரவற்பை பெற்றது. அதன் பிறகு கங்குவா படத்தில் சூர்யா சிறுத்தை சிவாவுடன் இணைந்தார். 2 வருட உழைப்பில் உருவான இப்படம் வந்த சுவடு தெரியாமலே போனது. கங்குவா படத்தில் அதிக சத்தம் இருந்ததால் ரசிகர்களை எரிச்சலையடைய செய்ததாகக் கூறப்பட்டது. பின்னர் கதையே புரியவில்லை என்றும் விமர்சித்தனர்.

சோஷியல் மீடியாவில் உருவான விமர்சனத்தால் இப்படத்தை தியேட்டரில் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. நாளுக்கு நாள் தனமனித தாக்குதலால் சூர்யாவும் மனவேதனையடைந்தார். இதற்கு ஜோதிகாவும் பதில் தாக்குதல்களை தந்தார். கங்குவா படம் தோல்வியில் இருந்து மீள சூர்யா புது ரூட்டை அமைத்தார். கார்த்திக் சுப்பராஜூவுடன் ரெட்ரோ படத்தில் இணைந்து பணியாற்றினார். இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தில் சூர்யா வித்தியாசமான முறையில் புது கெட்டப்பில் தோன்றியுள்ளார். அவரது ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் கண்ணாடி பூக்கள், கனிமா பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் கலக்கி வருகிறது.
கனிமா வைப் மோடு: தற்போது வெளியாகியுள்ள கனிமா பாடல்தான் ரசிகர்களின் வைப் மோடாக மாறியிருக்கிறது. சமூகவலைதளங்களை திறந்தாலே இப்பாடல்தான் ஆக்கிரமித்திருக்கிறது. சின்னத்திரை நடிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை இப்பாடலுக்கு நடனம் ஆடி மகிழ்கின்றனர். ரெட்ரோ திரைப்படம் கார்த்திக் சுப்பராஜின் வழக்கமான கேங்ஸ்டர் படமாக இல்லாமல் முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. பூஜா ஹெக்டே வாய் பேச முடியாத ஊமையாக நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் துள்ளலான பாடல்கள் வந்துள்ளன. இப்படம் மே மாதல் ரிலீஸ் ஆக இருப்பதால் படத்தின் டிரைலருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சூர்யா 45: ரெட்ரோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே சூர்யா -ஆர்.ஜே.பாலாஜி காம்போவில் உருவாகும் சூர்யா 45 படத்தின் அறிவிப்பு வெளியானது. கோவை சுற்றுவட்டார பகுதியில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், சென்னையில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கின்றனர். மேலும் இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிப்பது மிகப்பெரிய ப்ளஸ் என ஆர்.ஜே.பாலாஜியே தெரிவித்திருந்தார். இளம் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இப்படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார். இப்படி சூர்யா 45 படத்தில் புதுமையான விசயங்கள் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது.
தீபாவளி ரிலீஸ்: சூர்யா 45 படப்பிடிப்பு தளத்தில் த்ரிஷாவிற்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்ட புகைப்படங்கள் வெளியானது. கிட்டத்தட்ட படப்பிடிப்பு நிறைவுப்பகுதியை எட்டியுள்ளதாக கூறும் நிலையில், சூர்யா 45 படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில், நட்டி நட்ராஜ், யோகி பாபு, லப்பர் பந்து சுவாசிகா, நெடுஞ்சாலை ஷிவதா, ஹோம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இந்திரன்ஸ் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

அழகு குறையாத த்ரிஷா: இந்த பெயரில் என்ன மாயமந்திரம் இருக்கிறது என்று தெரியாது நாளுக்கு நாள் அழகு கூடிகொண்டே போவதாக ரசிகர்கள் த்ரிஷாவை புகழ்கின்றனர். வயது ஆனாலும் மார்க்கெட் உயர்ந்துகொண்டே போகிறது. தக் லைஃப், சூர்யா 45, தெலுங்கில் சிரஞ்சீவி படம் என கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கிறார். 2027 வரை கால்ஷூட் குறையவில்லையாம். அதனோடு லீட் ரோலில் நடிக்கும் படங்கள் குறித்த கதையை கேட்டு வருகிறாராம். சூர்யா 45விற்கு இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். நேற்று இவர் பதிவிட்ட போஸ்ட் ஒன்று இணையத்தில் வைரலானது. யார் இவருடைய காதலர் என்றும் எல்லோரும் கேட்க தொடங்கினர். காதல் கேப்சன் தான் ஹைலைட்டாக மாறியது. இந்நிலையில், சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படமாம். இதைத்தான் போஸ்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பிரம்மாண்ட திருவிழா: சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோயிலில் தொடங்கி சென்னையை நோக்கி படக்குழு நகர்ந்திருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் புதிய தகவலின் படி சென்னை ஈசிஆர் நகரில் பிரம்மாண்ட செட் அமைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பெரிய திருவிழா போன்ற காட்சி படம்பிடிக்கப்படுகிறதாம். அதற்காக சூர்யா, த்ரிஷா, சுவாசிகா என நட்சத்திர பட்டாளமே படையெடுத்துள்ளனராம். குறிப்பாக சூர்யா எப்போதும் போல ரொம்ப கேசுவலாக வேட்டி சட்டையில் கலக்குகிறார். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சூர்யா - த்ரிஷா பாடல்: முதல் முறையாக சூர்யா - த்ரிஷா காம்போ மெளனம் பேசியதே படத்தில் தொடங்கியது. அதன் பிறகு ஆறு படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. திருவிழா போல் அமைக்கப்பட்டிருக்கும் இந்த செட்டில் சூர்யா - த்ரிஷாவும் ஜோடி சேர்ந்து ஆட இருக்கிறார்களாம். இதற்காக 100க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் வந்துள்ளனர். ஒயிலாட்டம், மயிலாட்டம் குழுவும் வந்துள்ளதாம். லூசிஃபர், எம்புரான் படத்தில் பிருத்விராஜ் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்தது போன்று ஆர்.ஜே. பாலாஜியும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாராம்.

படப்பிடிப்பு நிறைவு: ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய எல்கேஜி, மூக்குத்தி அம்மன் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு பிறர் படங்களில் நடிப்பதை குறைத்து அவரே படத்தை இயக்கி நடிக்க தொடங்கிவிட்டார். நடிப்பிற்கு பிரேக் விட்டு சூர்யாவை வைத்து இயக்கும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக லப்பர் பந்து படத்திற்கு பிறகு சுவாசிகா செகன்ட் இன்னிங்சை தொடங்கியிருக்கிறார். இ்பபடத்திலும் அவருக்கு முக்கிய கதாப்பாத்திரம் என கூறப்படுகிறது. எனவே, விறுவிறுப்பாக நடந்து வரும் சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் முடிவடையும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











